வேட்டி தினம்
வேட்டி தினம்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றின் வழித்தடத்தில் ரோமானியர்களுக்கே ஆடை அனுப்பி நாகரிகத்தின் நளினத்தை வெளிப்படுத்தியவர்கள் தமிழர்கள். அத்தகைய ஆடை பாரம்பரியம் கொண்ட தமிழர்களின் அடையாளமாய் நீண்டகாலமாய் நின்று நிலைத்தது வேட்டி.
அது, தமிழர்கள் ஆடை மரபின் அழகான வெளிப்பாடு மட்டுமின்றி, பாரம்பரியத்தின் பகட்டான பதிவும்கூட. மானம் காத்ததுடன் மண்ணின் மணத்தை மாண்புற மலரச் செய்ததும் இந்த வேட்டிதான்.
எனவே, வேட்டி என்ற அழகான ஆடை மரபை ஆராதித்திடவும் வலுப்படுத்திடவும் அதை தொய்விலாது நெய்கின்ற நெசவாளர்களுக்கு தோள் கொடுத்திடவும் வேட்டி தினம் கொண்டாடலாம் என்ற யோசனையை முன் வைத்தவர் சகாயம் ஐ ஏ எஸ்.
அவர் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக இருந்த போது நடைமுறைப்படுத்திய இத்திட்டத்தை ராம்ராஜ் & எம் சி ஆர் போன்ற பெரு வணிகர்கள் தங்கள் வணிகத்திற்கான விளம்பரமாக்கி விட்டார்கள் என்பது சோகம்தான்
Comments