டி.ஆர்.ராமச்சந்திரன்
டி.ஆர்.ராமச்சந்திரன் பிறந்தநாள் இன்று
டி. ஆர். இராமச்சந்திரன் (சனவரி 9, 1917 - நவம்பர் 30, 1990) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். கிட்டத்தட்ட 150 திரைப்படங்களில் கதாநாயகனாகவும், பிற முக்கிய வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்துள்ளார். எந்த வேடத்தில் நடித்தாலும், நகைச்சுவை நடிகராகவே இவரின் நடிப்பு பெரும்பாலும் அமைந்திருந்தது.
வாழ்க்கைச் சுருக்கம்
இராமச்சந்திரனின் கரூர் மாவட்டத்திலுள்ள திருக்காம்புலியூரில் விவசாயியாக இருந்த ரங்காராவ், ரங்கம்மாள் ஆகியோருக்கு 1917 சனவரி 9 இல் பிறந்தார். இவருக்கு இரு சகோதரர்கள். நான்கு வயதிலேயே தாய் இறக்கவே தந்தை மறுமணம் செய்து கொண்டார். இராமச்சந்திரன் பாட்டியாரின் ஊரான குளித்தலையில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்தார்.
ராமச்சந்திரன் 1954 ஆம் ஆண்டில் சொந்தத்தில் படக்கம்பெனி தொடங்கி ‘பொன் வயல்’ என்ற படத்தைத் தயாரித்தார். இதில், ராமச்சந்திரனின் ஜோடியாக அஞ்சலிதேவி நடித்தார். இத்திரைப்படத்திலேயே சீர்காழி கோவிந்தராஜன் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். எழுத்தாளர் தேவன் எழுதிய கோமதியின் காதலன் என்ற கதையை அதே பெயரில் திரைப்படமாகத் தயாரித்து, சாவித்திரியுடன் சோடியாக நடித்தார்.
சொந்த வாழ்க்கை
டி. ஆர். இராமச்சந்திரனின் திருமணம் 1948-ல் நடந்தது. ஜெயந்தி, வசந்தி என்று 2 மகள்கள். திரைப்படத்துறையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், அமெரிக்காவில் மகளுடன் வசித்து வந்தார். அங்கு அவர் 1990 ஆம் ஆண்டில் காலமானார்.
இணையத்தில் இருந்து எடுத்தது
Comments