_குதிகால் வலியிலிருந்து விடுபட
*_குதிகால் வலியிலிருந்து விடுபட ஒரு சில வழிமுறைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:_*
வயதானவர்கள் முதல் சிறியவர்கள் வரை பெரும்பாலானோர் பொதுவான பிரச்சனைகளை சந்திப்பதில், குதிகால் வலியும் ஒன்று.
இதனால் சாதாரண வேலைகளை கூட செய்ய முடியாமல் நாள்தோறும் அவஸ்தை படுகின்றனர்.
குதிகால் வலி வருவதற்கு முக்கிய காரணம்; குதிகால் எலும்புக்கு கீழே கால்சியம் படிகங்கள் தேங்குவதால் வருவதாகும்.
இதனால் கால்களில் தாங்க முடியாத வலி ஏற்படுகிறது.
குதிகால் வலி, விளையாடும் போது ஏற்படும் காயங்கள், வாத பிடிப்புகள், எலும்பு தேய்மானங்கள் , உடல் பருமன் மற்றும் பொருந்தாத செருப்புகளை பயன்படுத்துவது போன்றவை முக்கிய காரணங்களாகும்.
இதனால் குதிகால் பகுதி வீக்கத்துடனோ, எரிச்சலுடனோ, குதிகால் பலவீனமாகவோ இருக்கும்.
சில சமயங்களில் குதிகால் வலியானது கீல்வாதம், ஆர்த்ரிடிஸ் போன்றவற்றாலும் வரும்.
ஹை-ஹீல்ஸ் அணிவதால் குதி கால் வலி உண்டாக்கும்.
குதிகால் வலியில் இருந்து உடனடியாக விடுபட சில எளிய இயற்கை வழிமுறைகள் உள்ளன.
அது என்னவென்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
1. *எப்சம் உப்பு:*
நாம் உணவில் பயன்படுத்தும் உப்பு, சாதாரண சோடியம் குளோரைடு அல்ல. அது மக்னீசியம் சல்பேட் போன்றவற்றின் கலவை.
இதன் வேதியியல் அமைப்பின் காரணமாகவே `உப்பு’ எனப்படுகிறது.
எனவே அது மளிகைக்கடைகளில் கிடைக்காது, மருந்து கடைகளில் கிடைக்கும். இங்கிலாந்தில் உள்ள எப்சம் என்ற ஊரில் கண்டறியப்பட்டதால், `எப்சம் உப்பு’ என்று அழைக்கப்படுகிறது.
எப்சம் உப்பு, கணுக்கால் வலி முதல் மனஅழுத்தம் வரை பல பிரச்னைகளுக்குத் தீர்வு தரும்.
அது 8 மருத்துவப் பலன்களை கொண்டுள்ளது.
எப்சம் உப்பு, குதிகால் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிப்பதோடு வலி, வீக்கம் மற்றும் அலர்ஜியை குறைக்க மக்னீசியம் சல்பேட் உதவுகிறது.
*தேவையான பொருள்கள்:*
எப்சம் உப்பு – 3 டேபிள் ஸ்பூன்
சூடான தண்ணீர் – தேவைக்கு ஏற்ப
மாய்ஸ்டுரைசர் – சிறிதளவு
*செய்முறை:*
பெரிய பாத்திரத்தில் எப்சம் உப்பை போட்டு வெதுவெதுப்பான நீரை ஊற்றி, கால் பாதங்களை அந்நீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும்.
பின்பு உர வைத்த பாதங்களை எடுத்து நன்கு உலர வைத்து, மாய்ஸ்டுரைசரை பயன்படுத்தி வலியுள்ள குதிகாலில் பகுதியில் சேர்த்து மசாஜ் செய்யவும்.
*2.மஞ்சள்:*
கால்களில் உள்ள வெடிப்புக்களை போக்குவதற்கு, தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, வெடிப்புள்ள பகுதியில் தடவி வந்தால் விரைவில் வெடிப்புகள் நீங்கும்.
குதிகால் வலிக்கு மஞ்சள் உடனடி நிவாரணம் கொடுக்கும். ஏனெனில் மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், குதிகால் வலியில் இருந்து விடுவிக்கும்.
*தேவையான பொருள்கள்*
பால் – 1கப்
மஞ்சள் தூள் – சிறிதளவு
தேன் – சிறிதளவு
*செய்முறை:*
பாத்திரத்தில் கப் பாலை எடுத்து, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது தேன் ஊற்றி நன்கு கலந்து தினமும் 2 முறை குடித்து வந்தால் குதிகாலியுள்ள வலியை எளிதில் குணப்படுத்தும்.
*இஞ்சி:*
இஞ்சியானது வலி நிவாரணியாகவும், அலர்சஜியின் எதிர்ப்பு பண்புகள், முழங்காலில் ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ், முடக்கு வாதம் மற்றும் பொதுவான தசை அசௌகரிய குறைபாடு கொண்ட நோயாளிகளின் உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குணப்படுத்த இஞ்சி உதவுகிறது;
ஆர்த்ரிடிஸ் வீக்கத்திற்காக வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்ளும் நபர்களுக்கு இஞ்சி வேர் ஒரு அற்புத மருந்து ஆகும்;
இதனை உட்கொண்டால் வலியில் இருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.
தசைப்பிடிப்புக்களாலும் குதிகால் வலி வரலாம். இதற்கு இஞ்சி நல்ல நிவாரணம் அளிக்கும். ஏனெனில் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வலி நிவாரண பண்புகள் உள்ளது.
ஆகவே குதிகால் வலியால் கஷ்டப்படுபவர்கள், தினமும் இஞ்சி டீயைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள் அல்லது இஞ்சியை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.
*தேவையான பொருள்கள்:*
ஒரு டம்ளர்பால்
ஒரு டேபிள்ஸ்பூன் டீத்தூள்
ஒரு டேபிள்ஸ்பூன் வெல்லம்
இஞ்சி சிறிதளவு
*செய்முறை:*
முதலில்அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
பிறகு அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் டீ தூள், இஞ்சி, வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
பிறகு அதை இரண்டு நிமிடங்கள் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால் இஞ்சி டீ.தயாராகும் இதை குடித்தால் குதிகால் வலி நிவாரணம் கிடைக்கும்.
Comments