நான் ஹீரோ ஆனதே ஒரு வைராக்கியத்துல நடந்தது
நான் ஹீரோ ஆனதே ஒரு வைராக்கியத்துல நடந்தது. நல்லா நினைவுல இருக்கு. ஒரு ரயில் பயணம். விஜயகாந்த் சார் நான் இன்னும் மூணு பேர் போயிட்டிருக்கோம். அந்த இடத்துலதான் முதன் முதலா நான் ஹீரோவா பண்ணனும்னு நினைக்கிற விருப்பம் பத்தி வாய் திறக்கேன். நான் சொன்னதும் பக்கத்துல இருந்த அந்த மூணு பேரும் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. எனக்கு அவமானமாப் போச்சு. நான் கூனிக் குறுகுறதைப் பார்த்த விஜயகாந்த் சார் கண் சிவந்திடுச்சு. அவங்களைப் பார்வையாலேயே முறைச்சவர. இந்த மாதிரியெல்லாம் நடந்துக்காதீங்கன்னு திட்டினார். அந்த நிமிஷம் எனக்குள்ள் வைராக்கியம் பிறந்தது. இவங்க முன்னாடி ஒரு படத்துலயாச்சும் நடிச்சிடணும்னு முடிவு செய்தேன். கடவுள் அருளால் அது நடக்கவும் செய்தது. இப்ப, உங்க கேள்விக்கு வர்றேன். ஹீரோ ஆகறதை விட அந்த இடத்தைத் தக்க வச்சுக்கிடறது பெரும்பாடு. இஷ்டத்துக்குச் சாப்பிட முடியாது, உடம்பை மெயின்டெய்ன் பண்ணணும். வெளியில சுதந்திரமாப் போய் வர முடியாது. ரசிகர்கள் மொய்ச்சிடுவாங்க. சினிமா பிசினஸ், சூட்சுமங்கள் தெரிஞ்சிருக்கணும். இதெல்லாம் என்னால முடியலை. எனக்கு கொஞ்சம் சம்பாதிச்சாலே போதும்கிற மனசு வந்திடுது. அதை சோம்பல்னு கூடச் சொல்லலாம். இந்த மாதிரி குணங்களை வச்சுக்கிட்டு எப்படி ஹீரோவா நிலைச்சிருக்க முடியும்?"
- லிவிங்ஸ்டன்
நன்றி: சினிமா விகடன்
Comments