கண்ணன் ரண சோட் ராய் ஆன கதை
நம் கண்ணன் ரண சோட் ராய் ஆன கதை தெரியுமா..?!
வாங்க தெரிஞ்சுப்போம்...!
கிருஷ்ணர் வடமதுரையை ஆட்சி செய்த காலத்தில்,
ஒவ்வொரு முறையும் அவன் தனது படைகளை இழந்ததுதான் மிச்சம்!
கடைசி யுத்தத்துக்கு முந்தைய காலகட்டத்தில், வேறொரு பிரச்னையும் காலயவனன் எனும் தீயவன் வடிவில் வந்தது.
யாதவர்களும் தன்னைப் போன்று பலம் உடையவர்கள் எனும் சேதியை நாரதர் மூலம் அறிந்து, மூன்று கோடி வீரர்களுடன் படையெடுத்து வந்தான் கால யவனன்.
உடனே, பலராமனுடன் ஆலோசித்த கண்ணன், கடலின் நடுவே 12 யோசனை அளவுள்ள அரணையும், துவாரகை நகரையும் நிர்மாணித்தார்.
பிறகு, தமது சக்தியால் , மதுரா மக்களை துவாரகையில் சேர்த்தார்
பின் மீண்டும் மதுராவுக்கு வந்து , அண்ணன்
பலராமருடன் ஆலோசித்து, தாமரை மாலையை அணிந்து, ஆயுதம் ஏதுமின்றி, பட்டணத்தின் வாசலில் இருந்து புறப்பட்டார்.
நாரதர் மூலம் கண்ணனின் அங்க அடையாளங்களை அறிந்து வைத்திருந்த கால யவனும் , ஸ்ரீகிருஷ்ணரைப் பின் தொடர்ந்தான்.
வெகுதூரம் சென்ற கண்ணன், இறுதியில் ஒரு மலைக் குகைக்குள் சென்று மறைந்தார்.
அவரைத் தொடர்ந்து குகைக்குள் நுழைந்த கால யவனன்,
அங்கே படுத்திருந்த நபரைக் கண்ணன் என்று கருதி, கோபத்துடன் உதைத்தான்.
அந்த நபர் விழித்தெழுந்து பார்த்ததும், கால யவனன் எரிந்து சாம்பலானான். அந்த நபர்... முசுகுந்தன்;
இஷ்வாகு வம்சத்தில் வந்த மாந்தாதாவின் மைந்தன். போர் ஒன்றில் தேவர்களுக்கு உதவியதால், அவர்களிடமிருந்து ஒரு வரம் பெற்றிருந்தார் முசுகுந்தன்.
வெகுகாலம் உறங்காமல் இருந்த முசுகுந்தன், நன்கு உறங்குவதற்கு ஏற்றவாறு ஆள் அரவமற்ற ஓர் இடத்தைக் காட்டும்படி வேண்டினார்.
தேவர்களும் இந்தக் குகையைக் காட்டி, ''நீங்கள் இங்கே படுத்துக்கொள்ளலாம். உங்களை எவரேனும் எழுப்பினால், நீங்கள் எழுந்து பார்த்ததும், அவர்கள் எரிந்து சாம்பலாவார்கள்!'' என வரமளித்தனர்.
ஆக, கால யவனனுடன் யுத்தம் செய்யாமல் ஓடியதால், ரணசோட் ராய் என்று கண்ணனுக்குப் பெயர் அமைந்ததாம்.
ரணசோட் ராய் ஆக கிருஷ்ணன் உறையும் இடமே டாகோர் கிருஷ்ணன் கோயில் .
குஜராத்தில் உள்ள பஞ்சதுவாரகையில் ஒன்று டாகோர் கிருஷ்ணா கோயில்...
Comments