தைப்பொங்கல் ******** திருநாள்:/கவிதை

  தை

           =====-----=====

 தைப்பொங்கல்

******** திருநாள்:

*****




 அகிலத்திற்கு ஒளிதரும் ஆதவன் என்பதை


 அன்றாடம் காண்கிறோம் கிழக்கிலிருந்து 

உதிப்பதை


 ஒவ்வொரு பொருளுக்கும் அடித்தளமே விதை


 உழவனின் உதவியால் மண்ணில் அழுந்திய விதை


 உற்பத்தியால் பெருக நன்றாய் வளர்ந்ததை 


 மகிழ்ந்தே தரணியெங்கும் பசுமையை சேர்த்ததை


 நெல்மணிகள் நிலத்தில் கதிராய் சாய்ந்ததை


 நெஞ்சம் மகிழ விவசாயி அறுவடை செய்ததை


 ஆலையில் உமியிலிருந்து பச்சரிசியாய்  பிரித்ததை


 மாதர்கள் அள்ளியே  மண்பானையில் போட்டதை


 பாலோடு சேர்ந்து பொங்கும் இன்பமதை 


 பொங்கலோ பொங்கலென சொல்லுவோம் நல்வார்த்தை


 கனிவோடு கரும்பும் இனித்து மகிழ்ந்ததை


 மஞ்சளோடு  மணக்க பானையில் சுற்றியதை



 காலகாலம் செய்யும் நம் தமிழர்களின் பண்பதை


 கதிரவனுக்கு காட்டியே  பொங்கலை படைத்ததை


  தைத்திருநாள் தருமே தமிழனுக்கொரு அடையாளத்தை


 தரணி தந்திடும் உழவுக்கொரு மரியாதை

 

 நாடாள்பவர்கள் அறியனும் வேளாண்மையின்  மகத்துவத்தை


 நாளும் உணவொன்றே தீர்க்கும் பசியதை


 பொங்கலாய் வரும்  இன்றைய தினத்தை


 போற்றி பெறுவோம் வாழ்வில் வளத்தை


முருக.  சண்முகம்



 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி