பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை-

 பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை- சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அதிரடி தீர்ப்பு. (#High_Court)

::::::::::::::::::*:::::::::::::::::*:::::::::::::::::*:::::::::::::::::::



 மதுமிதா ரமேஷ் என்பவர் தனது குழந்தை தவிசி பெரேரா என்பவரின் பிறப்புச் சான்றிதழில் உள்ள மணிஷ் மதன்லால் மீனா என்ற பெயரை நீக்க  திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடக்கோரிசென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  வழக்கு தொடர்கிறார்.


மனுதாரர் மதுமிதா ரமேஷ் என்பவர் தனது கணவரிடமிருந்து பரஸ்பர விருப்பத்தின் பேரில் முறையாக விவாகரத்து பெற்றவர்.


 பின்னர் தனது விருப்பத்தின் பேரில்  மருத்துவமனை உதவியுடன் ஒரு ஆண் உயிரணு கொடையாளி (  Sperm donor  ) மூலம் செயற்கை கருத்தரிப்பின் வழியே ஒரு குழந்தையை 23. 4. 2017 அன்று பெற்றெடுக்கிறார்.


 இந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கிய திருச்சி மாநகராட்சி சான்றிதழில் தந்தையின் பெயர் என்ற இடத்தில் ஏற்கனவே sperm donate செய்தவரின் பெயரை கட்டாயப்படுத்தி குறிப்பிட்டு சான்றிதழை வழங்குகிறது.


பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்படும் மணிஷ் மதன்லால் மீனா அந்தப் பெண்ணின் கணவரோ குழந்தையின் தந்தையோ கிடையாது. எனவே பிறப்புச் சான்றிதழில் அந்த பெயரை நீக்க வேண்டும் என்பதே மனுதாரரின் கோரிக்கை.


 இதுதொடர்பாக, மனுதாரர் உரிய மாநகராட்சி அதிகாரியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளிக்கிறார். ஆனால் அதிகாரியோ சான்றிதழில் உள்ள பெயரில் பிழை  இருந்தால் மட்டுமே தன்னால் சரி ( rectification) செய்ய முடியும். பெயரை நீக்குவதற்கு (removal)  தனக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்கிறார்.


 பிரச்சினை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு வருகிறது. நீதிமன்றம் தனது உத்தரவில் மனுதாரர் உரிய வருவாய் கோட்டாட்சியரை அணுகுமாறு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைக்கிறது.


 ஆனால் கோட்டாட்சியரோ மனுவின் மீது உத்தரவிட, பிறப்பு இறப்பு பதிவாளருக்கே ( Registrar of Births and Deaths) அதிகாரம் உள்ளது என மனுவை நிராகரிக்கிறார்.


 பிரச்சினை மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு வருகிறது.


 மனுதாரரின் வழக்காடி தனது வாதத்தில், Registration of Births and Deaths Act 1969 , பிரிவு-15 மற்றும் Tamilnadu Registration of Births and Deaths Rules 2000, விதி- 11 -ன்படி  பதிவாளரே இவ்விஷயத்தில் உத்தரவிட முடியும் என தெரிவிக்கிறார்.


 இதற்கிடையில், மனுதாரரின் முன்னாள் கணவரும், மனுதாரருக்கு sperm donate செய்தவரும், தாங்கள் சம்பந்தப்பட்ட குழந்தையின் தந்தை என உரிமை கோர மாட்டோம் எனவும் அதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை எனவும் தனித்தனியே பிரமாண பத்திரம் (Affidavit )தாக்கல் செய்கின்றனர்.


 மனுவினை விசாரித்த உயர்நீதிமன்றம், வாத பிரதிவாதங்களின் அடிப்படையில் கீழ்க்கண்ட தீர்ப்பினை வழங்கியது.


 ◆ பிறப்புச் சான்றிதழில் தவறு ஏற்படும் போது அதனை திருத்தும் அதிகாரத்தை சட்டமும் விதிகளும் பதிவாளருக்கே வழங்குகிறது. எனவே, பதிவாளர்  உரிய விசாரணை மேற்கொண்டு உரிய திருத்தத்தை மேற்கொள்ள உரிய பிறப்பு-இறப்பு பதிவு அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்.


◆ செயற்கை கருத்தரிப்பிற்காக மருத்துவமனையின்  முன்னெடுப்போடு  உதவிக்கு வந்த நபரின்  பெயரை குழந்தையின்  தந்தை என பிறப்புச்சான்றிதழில்  குறிப்பிட்டது தவறு.


◆  இது போன்ற சூழலில், குழந்தையை பெற்றெடுக்கும் தாயார் சமர்ப்பிக்கும் பிரமாணப் பத்திரத்தின்  அடிப்படையில் மட்டுமே பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.


 ◆ பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர்  குறிப்பிடப்பட  வேண்டியது  கட்டாயம் என எந்தச் சட்டமும் தெரிவிக்கவில்லை.


 ◆ ஆண்களால் கைவிடப்பட்ட  தனித்த பெற்றோர்(single parent ) மற்றும் பாலியல் வன்முறைகளால் திருமணம் ஆகாமல் ( rape victims) குழந்தை பெற்றுக்கொள்ளும்  பெண்களிடம் பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயரை குறிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை.


 ◆ குழந்தையை தனது கருப்பையில் சுமக்கும் தாயாரின் முடிவின்படி பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் உள்ள இடத்தை காலியாக விட வேண்டும்.




Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி