இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு
நேற்று (12.01.2022) இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக பாலவாக்கதில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு மாலை 3.00 மணிமுதல் 4.15 வரை நடைபெற்றது.
இந்த மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வை பள்ளியின் தலைமையாசிரியை அவர்களின் ஒப்புதலுடன் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி கோமளா சிவகுமார் அவர்கள் மிக சிறப்பாக நடத்தினார்.
பெண் குழந்தைகள் தங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். இந்த மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வில் பள்ளியின் உதவி தலைமையாசிரியை கலந்துக்கொண்டார்.நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாப்கிங்கள் வழங்கப்பட்டது. துணிகளாலான நாப்கிங்கள் பயன்படுத்தும் பெண் குழந்தைகளுக்கு துணிகளாலான நாப்கிங்கள் வழங்கப்பட்டது. தமிழக அரசின் உத்தரவின்படியும் ADW ஆணையாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் குழந்தைகள் அனைவரும் முககவசம் அணிந்து தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.
செய்தி புகைப்படம்
அல்லாபக்ஷீ
Comments