சில நேரங்களில் சில மனிதர்கள்./
சில நேரங்களில் சில மனிதர்கள். திரைப்பபத்தை குறித்து தன் எண்ணங்களை பதிவு செய்கிறார் கீர்த்தனா பிருத்விராஜ் விபத்தை மையமாகக் கொண்ட 4 கதைகளின் கதாபாத்திரங்களின் மன மாற்றம் குற்றவுணர்வு கோபம் இவை தான் சில நேரங்களில் சில மனிதர்கள். தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வசிக்கும் அசோக் செல்வன் எதற்கெடுத்தாலும் தன் தந்தையின் மீது கோபத்தை வீசிக் கொண்டே இருக்கிறார். அசோக் செல்வனின் தந்தையான நாசர் சராசரி தகப்பனின் நிலையில் தனது நடிப்பை எப்போது போலும் அழகாக நடித்துள்ளார். அன்றோடு வேலையை விடும் அசோக் செல்வன் தன் தந்தை கல்யாணத்திற்கு பத்திரிகை வைத்து விடலாம் இன்று நல்ல நாளென்று கூறுவதை ஒரு நிமிடம் கூட காதில் வாங்காது தான் செய்வதை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார். கெளரவம், பணம், பெயர், புகழ், தன்னை விட உயர்ந்தவன் இல்லையென்ற பிரவின் வெளிநாட்டிற்கு செல்வதற்கு மனைவியான ரித்விக்காவிடம் கேட்கவே இல்லையென்று தங்களின் வாக்குவாதத்தில் நேர்ந்தது தான் அந்த விபரீதம் மற்றும் மனமாற்றம். லாட்ஜில் ரூம் சர்வீஸ் மேனேஜராக பணிபுரியும் மணிகண்டன் 24 மணிநேரமும் புகைப்பிடித்தலே முத...