கற்பூரவள்ளி இலை

 தினமும் இந்த இலை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?



பலரும் அறியாத உண்மைகள் இதோ!



கற்பூரவள்ளி இலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. 


கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் 


சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.


பல மூலிகைகள் நமது வீட்டு தோட்டங்களில் அவற்றின் மகத்துவம் என்ன என்பதை அறியாமலே பலரும் வளர்த்து வருகின்றனர்.


அப்படி பலராலும் அவர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு மூலிகையாக கற்பூரவள்ளி செடி விளங்கி வருகின்றது. 


சரி வாங்க இதில் மறைந்துள்ள நன்மைகள் குறித்து பார்க்கலாம்..



நன்மைகள்:-


நமது உடலின் மேற்பரப்பான தோலில் சில நுண்கிருமி தொற்றால் படை, சொறி, அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. 


கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து நன்கு கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும்.


சுவாச பிரச்சனைகள் 


மழை காலத்தில் வயது பேதமின்றி அனைவருக்கும் சளி, ஜலதோஷம் ஏற்பட்டு மூக்கடைப்பு, 


மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டைக்கட்டு போன்றவை ஏற்படுகின்றது. 


கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து மூக்கில் விட்டால் மூக்கடைப்பு தொந்தரவுகள் நீங்கும்.


குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி நீங்கவும், 


ஆடிக்கடி மூச்சு விட முடியாமல் சிரமப்படுபவர்களுக்கும் 


சில சமயங்களில் இது ஆஸ்துமா காசநோயாக கூட மாற நேரிடும். 


இவர்கள் கற்பூரவள்ளி இலை சாப்பிடுவது உடலுக்கு நல்லது.



சிறுநீரகங்கள் நமது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான உப்புகள் மற்றும் இதர பொருட்களை சுத்திகரித்து, 


அக்கழிவுகளை சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேற்றுகிறது. 


கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது.  

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி