முத்தங்கள் நிரம்பிய நதி/கவிதை./சகுந்தலா சீனிவாசன்
முத்தங்கள் நிரம்பிய நதி
_________________________
உயிரைத் துண்டு துண்டாக
வெட்டி எறியப்பட்ட நதி
கிழக்கும் மேற்குமாக
கிடத்தப்பட்ட வெண்ணிற சாம்பலில்
எனது முத்தங்கள்..
நேற்று புத்தனின் பாதங்களில் இருந்து
பறித்துக் கொண்ட பூக்களை தான்
உன் அன்பெனும் கல்லறைக்கு சாத்தி இருக்கிறேன்
நான் உயிர்த்தெழுதலில்
உன் சொற்களில்
உன் அரவணைப்பில்
உன் உள்ளங்கைகளில்
கடவுளாய் பிறந்துவிட்ட தினம் ஒன்றில்..
நதி முழுவதும் முத்தங்களாய் பிறந்திருக்கிறேன்
முத்தங்கள் நிரம்பிய நதியில்
முதல் அடி எடுத்து வைக்கையில்
அதிரும் சிறு அதிர்வு தான்
என் இதயம் துடிக்கும் ஓசை...
சகுந்தலா சீனிவாசன்✍️
Comments
இரைச்சல்களில்லாத நதிக் கவிதையின் ஓசை நயமிக்க வரிகள்.
👍