இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு

 



தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. 


இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 105.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்களை குவித்தது.


இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 


இதன் மூலம் 130 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 62.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்கள் மட்டுமே எடுத்தது.


இதனால், தென் ஆப்பிரிகாவை விட 304 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற தென் ஆப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வந்தது.


இந்நிலையில், இன்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது. 


டெஸ்ட் போட்டியில் நாளை ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற இன்னும் 211 ரன்கள் தேவைப்படுகிறது. அதேவேளை இந்தியா வெற்றிபெற இன்னும் 6 விக்கெட்டுகள் தேவை. 


இதனால், செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டமான நாளை விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி