கேரட்டை சாறாக அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்.:

 கேரட்டை சாறாக அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்.:



எலும்பு உறுதி.:


வயது ஆகும் போது மனிதர்கள் அனைவரின் எலும்புகளும் உறுதித்தன்மையை இழக்கும். தினந்தோறும் கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு எலும்புகள் வலுவடைந்து, அதன் உறுதித்தன்மையும் அதிகரிக்கும்.


காயங்கள்.:


நமது உடலின் வெளிப்பகுதியில் பல்வேறு காரணங்களால் காயங்கள் ஏற்படுகின்றன. இது தானாக ஆறும் என்றாலும் கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு வெகு விரைவில் காயங்கள் ஆறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொழுப்பு நாம் உண்ணும் உணவில் அதிகளவு கொலஸ்ட்ரால் சேருவது உடலநலத்திற்கு தீங்கானது. தினமும் கேரட் ஜூஸ் அருந்துவது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேர்மானத்தை கட்டுக்குள் வைக்கிறது.


ரத்தம் உறைதல்.:


ரத்த காயங்கள் ஏற்படும் போது ரத்தம் விரைவாக உறைவதற்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் புரதம் சரியான அளவில் இருக்க வேண்டும். கேரட் ஜூஸ் அருந்தி வருவதால் இதன் அளவு சமநிலையில் வைக்கப்படுகிறது. 


புற்று நோய்.:


தினந்தோறும் கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு அவர்களின் உடலிலுள்ள செல்களின் ஆயுள்தன்மை நீட்டிக்கிறது. இதன் காரணமாக அவர்களின் உடலில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக கூறுகின்றனர்.


கண்பார்வை.:


கேரட்டில் கண் பார்வை சிறப்பாக இருப்பதற்கான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. கேரட் ஜூஸ் தினமும் பருகி வந்தால் கண்பார்வை மேம்படும். கண்புரை நோய் ஏற்படுவது தடுக்கப்படும். மாதவிடாய்...


பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காரணமாக சிலருக்கு அதிக வயிற்று வலி மற்றும் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. அப்படி அவதியுறுபவர்கள் கேரட் ஜூஸ் அருந்த நல்ல நிவாரணம் கிடைக்கும். வளர்சிதை மாற்றம் கேரட்டில் பல சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. இதிலுள்ள மூலப்பொருட்கள் உடல்செல்களின் வளர்சிதை மாற்றத்திறனை சமநிலைப்படுத்தி, உடலின் சீரான இயக்கத்திற்கும், உடல் நலத்திற்கும் உதவுகிறது. தொற்று நோய்கள் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கேரட் ஜூஸ் அருந்தி வருவது சிறந்தது. இதிலுள்ள வேதிப்பொருட்கள் ரத்தத்தில் நோய்யெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, தொற்று வியாதிகளை விரைவாக குணப்படுத்துகிறது.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி