புற்றுநோய், மஞ்சள் காமாலை, சர்க்கரை வியாதியை குணப்படுத்த இந்த ஒரு காய் போதும்
புற்றுநோய், மஞ்சள் காமாலை, சர்க்கரை வியாதியை குணப்படுத்த இந்த ஒரு காய் போதும்
நமது முன்னோர்கள் ஆரோக்கியமாய் வாழ்ந்ததற்கான முக்கிய காரணம் அவர்களின் உணவுமுறை. நாம் இப்போது முப்பது வயதுகளிலியே சர்க்கரைநோய், மாரடைப்பு போன்ற நோய்களுக்கு ஆளாவதும் நமது உணவுமுறையால்தான். இயற்கை நமக்கு எண்ணற்ற கொடைகளை தந்திருக்கிறது, அதை முன்னோர்கள் மதித்து செயல்பட்டதால்தான் அவர்களால் ஆரோக்கிய வாழ்வு வாழ முடிந்தது. இயற்கையை மதிக்காததன் விளைவு இன்று நம் வருமானத்தில் பாதி மருத்துவ செலவிற்கே செல்கிறது.
8 Health Benefits of Momordica
ஆந்திரா, கர்நாடகம், மஹாராஷ்டிரா, தமிழகத்தில் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது அதலைக்காய் என்னும் அற்புத மருந்து. அதலைக்காய் பற்றி நம்மில் பலரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இந்த ஒரு காய் உங்களை சர்க்கரைநோய், மஞ்சள் காமாலை, புற்றுநோய் என அனைத்து நோய்களில் இருந்தும் பாதுகாக்கும் என்றால் நம்புவீர்களா? ஆனால் இது பாதுகாக்கிறது என்பதுதான் உண்மை.
அதலைக்காய்
இந்தியாவில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த காய் பாகற்காய் வகையை சேர்ந்த ஒரு கொடி தாவரமாகும். இதிலுள்ள சத்துக்கள் நம்மை பலவகையான நோய்களில் இருந்து பாதுகாக்க கூடியது. இதனை யாரும் விளைவிக்க வேண்டிய அவசியமில்லை. மழைக்காலம் வந்தால் இது தானாகவே சாலையோரமும், விளைநிலங்கள் அருகிலும் விளையத்தொடங்கும் இது தென்மாவட்ட விவசாயிகளுக்கு முதலீடே இல்லாமல் இலாபம் தரக்கூடியத்தாகும். இதிலுள்ள சத்துக்கள் முறையே நீர்ச்சத்து, புரதம், கால்சியம், பொட்டாசியம் என இதில் உள்ள சத்துக்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இத்தனை சத்துக்கள் நிறைந்த இதை நாம் கவனிக்காமல் இருப்பது நமது அறியாமைதான்.
சமைக்கும் முறை
அதலைக்காய் பாகற்காயை போன்றே கசப்பு சுவையுள்ளது, அதனாலேயே பெரும்பலானோர் இதனை உண்பதில்லை. ஆனால் இதன் மகிமையை அறிந்தவரகள் இதனை ஒருபோதும் வெறுப்பதில்லை. இதனை சாம்பாராக வைக்க இயலாது எனவே பொரியலாகவோ அல்லது புளி குழம்பாகவோ சமைத்து சாப்பிடலாம். சரியான பக்குவத்தில் சமைத்தால் சுவையிலும், சத்துகளிலும் இதனை மிஞ்ச வேறு காய்கறிகளே இல்லை.
சர்க்கரை நோய்
இதன் சதைப்பகுதி இன்சுலின் போல செய்லபடக்கூடியது. இன்சுலின் என்பது நமது உடலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள மிகவும் அவசியம். மேலும் சர்க்கரையை குறைக்கும் பல சத்துக்களை கொண்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு அதலைக்காய் இயற்கை கொடுத்த வரமாகும்.
புற்றுநோய்
இதிலுள்ள சத்துக்கள் புற்றுநோய் செல்கள் இரத்தத்தில் வளர்வதற்கான ஆற்றலை தடுக்கிறது. முக்கியமாக இது கணையத்தை பாதுகாப்பதால், இதனை தொடர்ந்து உண்பவர்களுக்கு கணைய புற்றுநோய் வர வாய்ப்புகள் மிகக்குறைவு. அதுமட்டுமின்றி இதில் உள்ள லெய்ச்சின் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, புற்றுநோய் செல்கள் பாதிப்பையும் தடுக்கிறது.
சிறுநீரக செயல்பாடு
சிறுநீரக பாதிப்பு என்பது வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கக்கூடியது. ஒருவேளை உங்களுக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தால் இந்த அதலைக்காயை சாப்பிட மறந்துவிடாதீர்கள். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் சிறுநீரக கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக கறையத்தொடங்கும். இதில் உள்ள பைடோநியூட்ரின் உங்கள் இரத்தத்தை சுத்திகரிப்பதில் உதவும்.
மஞ்சள் காமாலை
பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் தாக்கக்கூடிய ஒரு நோய் மஞ்சள் காமாலையாகும். கண்களோ அல்லது சருமத்தில் ஒரு பகுதியோ மஞ்சள் நிறத்திற்கு மாறுவது இதன் முதன்மையான அறிகுறியாகும். வைட்டமின் டி குறைபாடே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதிலுள்ள ஆல்பமின் மஞ்சள்காமாலையை விரைவில் குணப்படுத்த உதவுகிறது. உங்கள் உணவில் தினமும் இதை சேர்த்துவர மஞ்சள் காமாலை தானாக குணமடைவதை நீங்கள் உணரலாம்.
எய்ட்ஸ்
எய்ட்ஸ் நோய் என்பது நம் இரத்த உள்ள அணுக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து நம் உடலின் பாகங்களை செயல்பட விடாமல் செய்வதே. அதலைக்காய் நம் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் ஹெச்ஐவி கிருமிகளின் தாக்கம் குறையும். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை சாப்பிடுவதை தவிர்க்கவே கூடாது. அதலைக்காய் கருக்கலைப்பிற்கும் பயன்படுத்த படுகிறது.
பருக்களை குறைக்கும்
இன்றைய தலைமுறையினரின் முக்கிய கவலைகளில் ஒன்று முகப்பருக்கள் ஆகும். முக அழகை கெடுக்கும் முகப்பருக்களை சரி செய்ய ஆயிரக்கணக்கில் செலவு செய்து பல செயற்கை மருந்துகளை வாங்குகிறார்கள். ஆனால் இயற்கை இந்த பிரச்சினைக்கு இலவசமாகவே ஒரு தீர்வை கொடுத்துள்ளது. இதிலுள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள் முகப்பருக்களை சரி செய்வதோடு முகப்பருக்கள் வராமலும் தடுக்கிறது.
செரிமானம்
பொதுவாகவே காய்கறிகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. நம் உடல் ஆரோக்கியமாக இருக்க நார்ச்சத்துக்கள் மிகவும் அவசியம். மற்ற காய்கறிகளை காட்டிலும் அதலைக்காயில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. இது நமது இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதோடு செரிமான மண்டலத்தையும் பாதுகாக்கிறது. மேலும் இதில் பொட்டாசியம், மோமோர்டியல் அமிலம், கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளது.
எடை குறைப்பு
முன்பே கூறியது போல இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் பசியுணர்வை கட்டுப்படுத்தும், எனவே நீங்கள் இதனை சிறிதளவு சாப்பிட்டாலே பசி அடங்கியது போல் திருப்தியாய் உணருவீர்கள் எனவே நீங்கள் அதிகம் சாப்பிடுவதை இது தடுக்கும். அதுமட்டுமின்றி இதில் மிக குறைந்த அளவே கலோரிகள் உள்ளது. ஒரு கப் அதலைக்காயில் 16 கலோரிகள் மட்டுமே இருக்கும். ஆதலால் எடை குறைக்க விரும்புவோர் தங்கள் டயட்டில் முக்கியமாக சேர்க்க வேண்டியது இந்த அதலைக்காய்.
பிரச்சினை
அதலைக்காயில் உள்ள ஒரே பிரச்சினை இதை பறித்தவுடன் சமைத்துவிட வேண்டும்.
இல்லையெனில் காய்கள் வெடித்துவிடும். எனவே இதனை வெளியூர்களில் பார்ப்பது மிகவும் கடினம்.
Comments