உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் தூக்கமின்மை....

 உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் தூக்கமின்மை....



தூக்கமின்மை பலருக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. கடுமையான உடல் உழைப்புக்கு பிறகு தூக்கம் வராமல் போனால், உடல் ஆரோக்கியம் கெடும்.


உடலை ஓய்வெடுக்க செய்யும் இயற்கையின் ஒரு வழிதான் தூக்கம். 24 மணி நேரத்தில், 8 முதல் 10 மணி நேரம் தூக்கமும், பிறகு விழிப்பும் ஏற்படுத்துவது நரம்புகளின் முக்கிய பணியாகும். தூக்கத்தின் நேரம் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். ஒரு சிலர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தால் 4 முதல் 5 மணி நேரம் தூங்கி எழுவார்கள். இது, 8 மணி நேரம் தூங்கியதற்கு சமம். தூக்கம் மன அழுத்தத்தை குறைக்கும். மூளைக்கு ஓய்வைத் தரும். உடலும், மனமும் புத்துணர்வு பெறும். ஒரு சிலர் தலையணையில் தலையை வைத்தவுடன் தூக்கம் சுண்டி இழுக்கும். சிலருக்கு புத்துணர்வு ஏற்படாது. களைப்பு தொடரும்.


தூக்கமின்மை பலருக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. கடுமையான உடல் உழைப்புக்கு பிறகு தூக்கம் வராமல் போனால், உடல் ஆரோக்கியம் கெடும். மூளைக்கு அதிக வேலை தரும் பலரையும் தூக்கமின்மை நோய் தாக்குகிறது. இதேபோல் கடின உடல் உழைப்பாளிகளுக்கும் தூக்கமின்மை ஏற்படலாம். சுற்றுப்புறச்சூழல் எரிச்சலூட்டுவது, அதிக குளிர், அதிக வெப்பம், ஈரப்பதம், கொசுக்கடி அல்லது காதுக்கு அருகே கொசு சத்தமிட்டு பறப்பது ஆகியவை தூக்கத்தை கெடுக்கும்.


இதுபோன்ற வெளிப்புற விஷயங்களால், தூக்கம் தடைபடுவதை சரி செய்து தூங்க முற்படலாம். ஆனால் தூக்கமின்மை ஒரு நோயாக வெளிப்பட்டால் அதை வேறு வழியில் தான் சரி செய்ய முடியும். கவலை, அதிகளவு புகை பிடிப்பது, மதுபானம் குடிப்பது, வெகு நேரம் கழித்து இரவில் சாப்பிடுவது, தூங்காமல் வேலை செய்வது, காற்றோட்டம் இல்லாத அறையில் தூங்க முற்படுவது, தூங்குவதற்கு முன்பு சதுரங்கம், கேரம், சீட்டு விளையாடுவது ஆகியவை தூக்கமின்மை நோயை ஏற்படுத்தும். சுற்றுச்சூழலில் அதிகளவு சத்தம் இருந்தால் தூக்கம் ஏற்படாது. எனவே அயர்ந்து தூக்கங்கூடிய சூழலை ஏற்படுத்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்...

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி