மாணிக்க விநாயகம்
பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் நேற்று சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் காலமானார். அவருக்கு வயது 78.
மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரை சேர்ந்த பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் இராமையாவின் இளைய மகன் மாணிக்கவிநாயகம். இவர், பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தி பாடல்கள், நாட்டுபுறப்பாடல்களையும் பாடியுள்ளார்.
திருடா திருடி, கம்பீரம், பேரழகன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். அவரின் இறுதி அஞ்சலி இன்று சென்னையில் நடைபெறவுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நன்றி: இந்து தமிழ்திசை
Comments