க. நா. சுப்ரமண்யம்

 க. நா. சுப்ரமண்யம்


சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்
நினைவுநாள் இன்று
தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை எனும் ஊரில் பிறந்த க.நா.சு, சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார். உலக இலக்கியத்திற்கு இணையாக தமிழ் இலக்கியம் வளரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட, க.நா.சு தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உலகத்தின் சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, கடுமையாக உழைத்தார். ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார். “பொய்த்தேவு” புதினம் இவரது புகழ்பெற்ற படைப்பு. 1986ம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது.
தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகரான பாரதி மணி க. நா. சு வின் மருமகன். எழுதவும் வாசிக்கவும் ஒருநாளில் பதினேழு மணி நேரங்களை செலவிட்டார். தமிழில் கோட்பாடுகள் அடிப்படையில் அல்லாமல் இரசனை அடிப்படையில் விமர்சன இலக்கியம் வளர்த்த முன்னோடி க.நா.சு.
இணையத்தில் எடுத்தது.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி