'பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர்' /பிருந்தா சாரதி அவர்களின் புதிய கவிதை நூல்
பிருந்தா சாரதி அவர்களின் புதிய கவிதை நூல்
*
'பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர்'
*படைப்பு சங்கமம் விழாவில் 11.12.21 அன்று சென்னையில் வெளியீடு
*
ஹைக்கூ கவிதைகள்
*
பிருந்தா ஆகச்சிறந்த கவிஞன் என்பதில் எனக்கு அவனை சந்தித்த முதல் நொடியிலிருந்து இன்று வரை எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. 'ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம்' தொகுப்பிலும் 'எண்ணும் எழுத்தும்' தொகுப்பிலும் மிக அற்புதமானக் கவிதைகளைப் பிருந்தா எழுதியிருப்பார்.
இருவருக்கும் ஒருவரையொருவர் மறைமுகமாகப் பிடித்திருந்தும் இன்றுவரை அதை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டதில்லை. இருவருக்கிடையே பல்லாயிர மைல் இடைவெளியுள்ள சலனமற்ற மௌனக்கடல் உறைந்து கிடக்கிறது. ஆனால் பிருந்தாவின் கவிதையில் பறக்கும் பறவையின் இறக்கைகள்தான் எங்கள் இருவரையும் ஒரு புள்ளியில் இணைக்கிறது.
- இயக்குனர் வசந்தபாலன்
*
பாஷோவும், ஓஷோவும் கைகுலுக்கி கொள்ளும் ஹைக்கூவைப் படைத்து வாசகர்களை ஒரு பரந்துபட்ட உலகிற்கு மாயக்கம்பளத்தில் அழைத்து செல்கிறார் பிருந்தா.
- பொறியாளர் கோ. லீலா
*
படைப்பு சங்கமம் விழாவில் 11.12.21 அன்று சென்னையில் வெளியீடு
*
முகப்போவியம் மற்றும் உள் ஓவியங்கள்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்
*
பின் அட்டை ஓவியம்: ஓவியர் சபரி
*
வடிமைப்பு : முகமது புலவர் மீரான்
*
பக்கம்: 180
*
-பிருந்தா சாரதி
*
#BashoMyNeighbour #BrindhaSarathy
Comments