இறுதிபக்கம்/திரைப்படம் விமர்சனம்
இறுதிபக்கம்/திரைப்படம் விமர்சனம்
தமிழ் சினிமாவில் சஸ்பென்ஸ் திரில்லர் படங்கள் பெரும்பாலும் ஓரே கதையை திரும்ப திரும்ப காட்டப்படுவது போன்று இருக்கின்றன.
அப்படியிருக்கும் தருவாயில் திரையரங்கில் டிசம்பர் 17 அன்று வெளியாகியுள்ள இறுதிபக்கம் படம் ஒரு புதுவிதமான கோணத்தில் காட்சியளிக்கிறது.
இயக்குனர் மனோ வெ கண்ணதாசன் அவர்களுக்கு இது முதல் படமென்றால் நம்புவதற்கு சிரமம் தான்.
படத்தின் ஆரம்பத்தில் ஒரு கொலை நடக்கின்றது.கொலைக்கான குற்றவாளியை தேடுவதாக படம் நகர்கிறது.
படம் நகர நகர குற்றவாளி இவரோ இல்லை இல்லை இவரோ என்று படம் பார்ப்பவர்கள் தங்களது கருத்துக்களை பகிரும் வகையில் உள்ளது.நூறு நாள் ஓடுவதில் இல்லை வெற்றி. படமானது பார்ப்பவர்களை உள்ளே இழுத்து பேச வைக்கிறது என்பது தான் அந்த படத்தின் வெற்றி .
சுவாரஸ்யமான படமா என்றால் கண்டிப்பாக இல்லை.எதார்த்தமான படம். யாராலும் குற்றவாளியை கணிக்க முடியாத வகையில் இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும் தமிழ் சினிமாவில் புதுவிதமான அணுகுமுறை புதிய பார்வை பாராட்டுக்குரியது.
காதலுக்கும் காமத்துக்குமான தொடர்பை ரொம்ப நேர்த்தியான முறையில் படத்தில் காட்டப்படுகிறது.
காதலோட உச்சக்கட்டம் தான் காமம் என்று சொல்வதை ?இல்லை காமம் வெறும் உடல் சார்த்தது . காதல் மனசு சார்ந்தது என்று பிரித்து பார்த்து காதல் ஒருமனிதனை எந்த இடத்தில் கொண்டு போய் நிறுத்தும். காமம் ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்கிறது இறுதிபக்கம்.
தன்னைவிட மூத்தவர்கள் மீது வரும் காதல் ஒருபோதும் காமமாக மாறுவதில்லை .அது காதலாக காத்திருக்கவும் இறுதியில் அனைத்து உண்மைகளையும் சொல்லி தோள் சாயவும் தயாரகவே இருக்கிறது.
பல்வேறு சூழ்நிலையில் மனிதன் குழப்பிக் கொள்ளும் ஒரு விஷயம் காதலித்தால் தான் காமத்தை அனுபவிக்க முடியும் என்பது.
உன் தேவை காமம் என்றால் அதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. அதற்கு ஏன் காதலை சொல்லி காரியத்தை நிறைவேற்றிக் கொள்கிறாய் என்கிறது இறுதிபக்கம்.
பலருக்கு முரண்பாடான கருத்துக்களை கொடுக்கும் வகையில் இறுதி காட்சிகள் இருந்தாலும் சமுதாயத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது இனிவரும் காலங்கள் எதையெல்லாம் சந்திக்க போகிறது என்பதை அழகாக படமாகியுள்ளார் கண்ணதாசன் அவர்கள்.
படத்திற்கு மற்றும் படம் வெற்றிப் பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- கீர்த்தனா பிருத்விராஜ்
Comments