நடந்திருப்பது தேச துயரம், மிக பெரிய துயரம்
நடந்திருப்பது தேச துயரம், மிக பெரிய துயரம்
இந்த நேரம் பரபரப்பான கருத்துக்களை சொல்கின்றோம், விசாரணையின் கோணத்தை சொல்கின்றோம் என கிளம்ப நாம் ஒன்றும் இம்மாதிரி உணர்வுபூர்வமான நேரங்களில் சம்பாதிக்க அலையும் யுடூயுபர்களோ இல்லை மீடியாவோ அல்ல.
நாம் இந்திய குடிமகனுக்கு இருக்கவேண்டிய கடப்பாட்டினை கொண்டவர்கள்
நம்மால் ஆயிரம் ஊகங்களை கூற முடியும் என்றாலும் இது அதற்குரிய நேரம் அல்ல, விசாரணை நடக்கட்டும் முறையான செய்திகள் அவர்கள் மூலமாக வரட்டும்
அந்த சாத்தியம் இந்த சாத்தியம் இப்படி ஒரு வாய்ப்பு எனஇம்மாதிரி நேரங்களில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்துவது மிக பெரிய தவறு, அதை நாம் மட்டுமல்ல யாரும் செய்தல் கூடாது.
இப்போது செய்யவேண்டியது அந்த வீரர்களுக்கான அஞ்சலி, அது ஒன்றுதான்.
ராணுவ சீருடையினை அணிய தொடங்கும்பொழுதே சாவு எப்பொழுதும் வரும் என துணிந்து எதிர்கொள்வபவனே ராணுவ வீரன்,சாவு அவனுக்கு ஒரு அங்கீகாரம்.
களத்தில் சாவதையே ராணுவத்தான் விரும்புவான், இந்த கொடுஞ்சாவும் ஏதோ ஒரு எச்சரிக்கையினை செய்தியினை தேசத்துக்கு சொல்கின்றது அவ்வகையில் தன் கடமையினை முடித்துவிட்டு செல்கின்றார்கள். அந்த வீரர்களுக்கு வீரஅஞ்சலி செலுத்துவோம், அவர்களுக்காய் கூடுதல் விளக்குகளை ஆலயத்தில் ஏற்றுவோம், வீடுகளில் ஏற்றுவோம், அதுதான் இப்பொழுது எல்லா இந்தியரும் செய்ய வேண்டிய ஒன்று.
ஜெய்ஹிந்த்.
Comments