யோகா பி கே.எஸ் அய்யங்கார்
பி எஸ் அய்யங்கார்
பி.கே.எஸ்.அய்யங்கார் அல்லது பில்லூர் கிருஷ்ணமாச்சாரி சுந்திரராஜ அய்யங்கார் (டிசம்பர் 14, 1918 - ஆகஸ்ட் 20,2014
யோகா நிறுவனர் மற்றும் உலகின் முன்னணி யோகா ஆசிரியர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். அவர் பதஞ்சலி யோக சூத்திரங்கள், யோகா பயிற்சி, யோகாத்தின் ஒளி, பிராணயாமம் உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
இப்போ யோகா தினம், யோகா பயிற்சி மையங்கள் என்றெல்லாம் விழிப்புணர்வு வந்து விட்டாலும் ஆரம்ப காலத்தில் இப்பயிற்சிக்கு வித்திட்டவர் பி.கே.எஸ். அய்யங்கார் தான். இவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர் தற்போது, உலகம் முழுவதும் இந்த யோக கலையை பரப்பி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் புல்லுர் மாவட்டத்தில் பிறந்த கிருஷ்ணமாச்சாரிய சுந்தரராஜ அய்யங்கார் யங் ஏஜில் காசநோய் மலேரியா, டை பாய்டு போன்ற நோய்களால் தொடர்ச்சியா பாதிக்கப்பட்டு ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தார். இதையடுத்து ஸ்கூல் டீச்சரான் இவரோட அப்பா கிருஷ்ணமாச்சாரியர், இவரை 16 வயசில் யோகா வகுப்புக்கு அனுப்பினார். இவரோட குரு டி.கிருஷ்ணமாச்சாரியர் எல்லா யோக வித்தைகளையும் கற்றுக்கொடுத்து, அவரது உடல் நிலையை தேற்றினார்.
பி.கே.எஸ்.அய்யங்காருக்கு ஆங்கில புலமை இருந்ததாலே 18 வயதிலேயே இவரை புனேவுக்கு அனுப்பி யோக கலையை கற்பிக்க செய்தார் இவரது குரு. அய்யங்காரிடம் பயிற்சி பெற்றவர்களில் பிரபலமானவங்க லிஸ்டுலே, ஜெயபிரகாஷ் நாராயணன், ஜெ.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் ஆவர். நாட்டின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத்தால் பாராட்டப் பெற்றவர் அய்யங்கார். யோகாசன கலையை, சீரிய முறையில் கற்றுத்தந்த அய்யங்காரை, போப் ஜான் பால், இந்தோனேசிய துணை அதிபர் முகமது ஹட்டா போன்றவர்கள் வாயார புகழ்ந்துள்ளனர்.
கடந்த 1966ல் இவரு எழுதுன "லைட் ஆப் யோகா' -ங்கற புத்தகம் 18 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் யோகா குறித்து, 14 புத்தகங்கள் எழுதியிருந்தாராக்கும் .
Comments