ந.பிச்சமூர்த்தி நினைவு நாள்
இன்று டிசம்பர் 4 1976 தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படும் ந.பிச்சமூர்த்தி நினைவு நாள்
தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கூறப்படுபவர் ந.பிச்சமூர்த்தி ஆவார். பாரதிக்குப் பிறகு மொழி ஆளுமை, கூறும் முறை ஆகியவற்றால் நவீனத் தமிழ் இலக்கியத்தில்ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் ந. பிச்சமூர்த்தி ஆவார்.
தத்துவார்த்தம் பிணைந்த கதைசொல்லும் முறையினைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்இவரது கவிதைகள் திருமூலரின் பாடல்களைப் போன்று அமைந்திருப்பதால்இவரைத் தமிழ்ப் புதுக்கவிதையின் திருமூலர் என்றும் அழைக்கின்றனர்.
தமிழ்ப் புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு அதனை வளப்படுத்த அயராது பாடுபட்ட தமிழ்ப்புதுகவிதையின் தந்தையாகிய பிச்சமூர்த்தி இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர் .
இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன தமிழின் புத்திலக்கியத்தின் முன்னோடி பிச்சமூர்த்தி உருவாக்கிய புத்திலக்கியம் அவரின் பெயரை என்றென்றும் தமிழிலக்கிய வரலாற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கும்
Comments