ஸ்ரீரங்கம் பகல்பத்து நிகழ்ச்சி நாளை சொர்க்கவாசல் திறப்பு
ஸ்ரீரங்கம் பகல்பத்து நிகழ்ச்சி நாளை சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி 2021 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்... 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சாமி திருக்கோவில் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா உலகப் புகழ்பெற்ற விழாவாகும். 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சாமி திருக்கோவில் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா உலகப் புகழ்பெற்ற விழாவாகும். சிறப்பு வாய்ந்த இவ்விழா பகல்பத்து, ராப்பத்து , இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் 20 நாட்களும் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார். மேலும் மார்கழி மாதம் என்றாலே அது பெருமாளுக்குரியது என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட மார்கழியில் முக்கியமான நாள் வைகுண்ட ஏகாதசி. பெருமாள் பக்தர்களுக்கு வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியமான திருநாள். அன்றைய நாளில் விரதமிருந்து கண்விழித்து பெருமாளை தரிசனம் செய்வது சிறப்பு. மேலும் ஏகாதசி அன்று நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படும். பெருமாள் சொர்க்க வாசல் வழியே எழுந்தருளி தரிசனம் கொடுக்க பக்தர்களும் அதே சொர்க்க வாசல் வழியாக வந்து பெருமாளை சேவிப்பது வழக்கம். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி இந்த ஆண்டு எப்போது வருகிறது என்பதை தெரிந்துக் கொள்வோம் வாங்க... தற்போது வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் ஸ்ரீரங்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் வரும் டிசம்பர் 14-ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற கோயில்களில் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி 2022ல்தான் வைகுண்ட ஏகாதசி என்று சொல்கிறார்கள். இதில் எந்த ஏகாதசியை நாம் கடைப்பிடிக்க வேண்டும். ஏன் இந்த வித்தியாசம் இந்த ஆண்டு மட்டும் வருகிறது? காரணம் என்ன? என்பதற்கு ஆச்சாரியர்கள் கூறும் பதில், ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படும். இதைப் பெரிய ஏகாதசி என்றும் கூறுவார்கள். மேலும் அனைத்து ஆலயங்களிலும் ஒரே நாளில் ஏகாதசி கொண்டாடுவதுதான் வழக்கம். ஆனால், பத்தொன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை இதேபோன்று ஶ்ரீரங்கத்துக்கும் பிற கோயில்களுக்கும் வேறுபாடு வருவது உண்டு. அந்த ஆண்டில் ஶ்ரீரங்கத்தில் மட்டும் கைசிக ஏகாதசியும் வைகுண்ட ஏகாதசியும் மாறிவரும் என்று கூறுகின்றனர். எனவே பக்தர்கள் இதை மனதில் கொண்டு குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஶ்ரீரங்கத்தைச் சார்ந்தவர்கள் வரும் டிசம்பர் 14-ம் தேதியும் மற்றவர்கள் அவரவர்கள் ஊரில் அருகே இருக்கும் பெருமாள் கோயிலில் கொண்டாடும் தினத்திலும் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். மேலும் எல்லா ஏகாதசி விரத நாள்களுமே மிகவும் முக்கியமானவைதான். எனவே பக்தர்கள் இரண்டு நாள்களிலும் விரதமிருந்து பெருமாளை வழிபடுவது நல்லது
Comments