மனதைத் தெப்பமாக்குங்கள். துன்பங்கள் ஓடிவிடும்

 

மனதைத் தெப்பமாக்குங்கள். துன்பங்கள் ஓடிவிடும்' மஹா பெரியவர்

 


காஞ்சி மஹாஸ்வாமிகளின் 28ஆவது வார்ஷிக ஆராதனை 30ந் தேதி (30-12-21) அனுசரிக்கப்படுகிறது.

 

ஒரு முறை மகா பெரியவரிடம் ஒரு பெண்மணி `நான் நிறைய ஸ்லோகங்கள் சொல்றேன்.ஆனால் என் பிரச்னைகள் தீரவில்லை. பகவான் கண் திறந்து பார்க்கலை.' என்று வருத்தப்பட்டார்.

 

பெரியவர் கேட்டார்: `எப்படி சுலோகம் சொல்றே? சுவாமி முன்னால உட்கார்ந்து ஸ்வாமியை மனசுல நிறுத்தித் தானே சொல்றே?'

 

`வேற வேலை பார்த்துண்டே சொல்றேன். மனப்பாடம் பண்ண ஸ்லோகங்கள்.' என்றார் பெண்மணி.

 

அதற்குப் பெரியவர் சொன்னார்.` காய் நறுக்கணும்னா அருவாமனை, கத்தியைக் கிட்டே வச்சுக்கறோம். சமைக்கணும்னா அடுப்புகிட்ட போகணும். குளிக்கணும், துவைக்கணும்னா தண்ணி கிட்டப் போறோம். ஸ்கூட்டர், கார் எதுவா இருந்தாலும் கிட்ட இருந்து ஓட்டினாத்தான் ஓடறது. சுலோகம் சொல்லணும்னா மனசு சுவாமி கிட்ட போகவேண்டாமா? சர்வ அந்தர்யாமி அவன். ஆனாலும் பிரச்னை பெரிசுன்னா பக்கத்துல உட்கார்ந்து அனுசரணையா சொல்லுங்கோ. நிச்சயம் கேட்பான். கல்லைத் தூக்கி சமுத்திரத்துல போட்டா மூழ்கிடும். ஆனாலும் மரத்தால கப்பல் பண்ணி அதுல எவ்வளவு கல்லை ஏத்தினாலும் ஒண்ணும் ஆகறது இல்லை. நம் கவலைகள் கல் மாதிரி. பகவான் தெப்பம் மாதிரி. மனசு என்கிற சமுத்திரத்தில் பகவானைத் தெப்பமாக்கணும். தெய்வத்தை இணைக்கிற ஆணிகள்தான் பூஜை, மந்திரங்கள் எல்லாம். அப்புறம் கவலைகளைத் தூக்கி தெப்பத்தில் இறக்கலாம். சம்சார சாகரத்தில் முழுகாம கரை  சேர்ந்து விடலாம். '

 

தொகுப்பு ஸ்ரீதர் சாமா

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி