வெ.தட்சிணாமூர்த்தி
கர்நாடக இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான வெ.தட்சிணாமூர்த்தி 1919ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி கேரளாவில் பிறந்தார்.
1950ஆம் ஆண்டு வெளிவந்த 'நல்லதங்காள்' திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழிலும் அப்போது வெளியானது. 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையிசை உலகில் மிகவும் பிரபலமான தட்சிணாமூர்த்தி ஏராளமான தமிழ் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இவர் மலையாளப்பட உலகில் 4 தலைமுறை திரைப்படங்களுக்கு இசை அமைத்த பெருமைக்குரியவர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இசை அமைத்துள்ளார்.
இவர் சிறந்த இசையமைப்பாளருக்கான கேரளா மாநில திரைப்பட விருது, சுவர்ணமால்யா யேசுதாசு விருது, கேரளா மாநிலத்தின் தானியல் வாழ்நாள் சாதனை விருது, மகாத்மாகாந்தி பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம் ஆகியவற்றை பெற்றுள்ளார். நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு இசை அமைத்த பெருமைக்குரிய இவர் 2013ஆம் ஆண்டு மறைந்தார்.
Comments