புதுவருட சிந்தனைகள்/மஞ்சுளாயுகேஷ்

 




நாட்காட்டியின் இறுதி பக்கத்தினை கிழிப்பது என்பது எப்போதும் ஒரு கண நேரத்து செயலாய் இருப்பதேயில்லை. கிழிப்பதென்ற எண்ணம் மனதில் எழும் போதே வருடத்தின் ஒட்டுமொத்த நிகழ்வுகளும் சிந்தனையில் தோன்றி மறைகின்றன.

2019 என்பது ரொம்பவே சந்தோசமாக இருந்த வருடம்‌. பாரீஸ் தலைநகரில் அட்டகாசமாச வானவேடிக்கையை கண்டுகளித்தவாறே 2020 புத்தாண்டை வரவேற்றது அவ்வளவு ஆனந்தமாக இருந்தது. இந்த வருடத்தினை நாங்கள் ரொம்பவே ஆனந்தமாக தான் ஆரம்பித்தோம். போன வருடம்என் வாழ்க்கையை என் கையில மீட்டுத் தந்திருக்கின்றது. தூரப் பயணங்கள், அவை தந்த அனுபவங்கள், வாழ்க்கையில் மறக்க முடியாத சந்திப்புக்கள், அந்த சந்தோசங்களை சுமந்த எழுத்துகள், நம்பிக்கை தந்து வாழ்வை மீட்டுத் தந்த வார்த்தைகள், எங்குமே வெளிப்படுத்தத் தோன்றாத பொக்கிஷமான புகைப்படங்கள என இந்த ஆண்டின் நினைவுகள் எல்லாம் எண்ணிலடங்காதவை. எனக்கு எழுத்தாளர்,கவிஞர் என பெருமையை தேடித்தந்த *பீப்பிள் டுடே * உமாகாந்தன் அவர்களும் என்னை கவிஞர் என அடையாளம் படுத்தி பெருமை தந்த நிலாமுற்றம் மாறன் ஐயா மற்றும் குழுவினர்கள் உலகமெங்கும் எனக்கு பெருமையைத்தேடி தந்த * ராணி வார இதழ் * ஆசிரியர் சகோதரி அவர்களும் அனைவரும் எனக்கு கிடைத்த பொக்கிஷம். இந்த ஆண்டின் சகல சந்தோசங்களிலும் துன்பங்களிலும், மன உளைச்சல் ஏற்படும் போதும் ஆறுதல் பேச்சால் நம்பிக்கை ஏற்படுத்தும் என் உறவுகள்பலம் தருவதும் ஓர் பெரும் வரம். அதுவும் ஒவ்வொரு நாளையும் ஓர் புதிய விஷயங்களைக் கற்றுக் கொடுத்து என்னை சுவாரசியமாய் கடத்தவும்,எதைப்பற்றியும் பேசி ஊக்கமளிக்கும் கணவரும் பிள்ளையும் என் நல்வினை. ஆனால் நடுவில் பல போராட்டங்கள் எனினும் அவற்றை எதிர்கொள்ள வைத்த எங்கள் இறைவன் சிவபெருமான் துணையுடன் ரொம்ப அழகாக சந்தோசத்தோடு முடித்து புது வருட தொடத்தை வரவேற்க தயாராகின்றோம். என் வாழ்நாளில் நான் அதிகமாய் வாசித்தது இந்த வருடத்தில்தான். நிறைய படிப்பினைகள் வேதனைகள் உறவுகளை காண முடியாத தவிப்புகள் அவர்களை ப்பற்றிய அக்கறை கலந்த பயங்கள் என நமது பாதுகாப்பு சிக்கனம் குடும்பத்தினருடன் ஒன்றுமை அனைவருக்காகவும் ஆண்டவரிடத்தில் பிரார்த்தனை செய்வது என நம்மை சீராக்கியது என்றே சொல்வேன் . வாழ்நாளில் நாங்கள் அதிகமாய் நல்லநல்ல திரைப்படங்களைத்தேடி தேடி பார்த்ததும் இவ்வருடத்தில்தான். 2021 ஆம் வருடம் ஆரம்பித்த பொழுது மனம் இறுக்கமாக இருந்தது. உறவுகளை காண முடியாமல் தவித்து உள்ளுக்குள் ஏக்கத்துடன் கடவுளிடம் மிகுந்த நம்பிக்கை வைத்து பிராத்தனைகளுடன் ஆரம்பித்தது. ஒருவாறாக எல்லாம் சீராக செல்கையில் சொந்த மண்ணில் கால்பதித்து உறவுகளை கண்டு கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது கடவுளின் ஆசி என்றே சொல்லுவேன் இவையெல்லாம் எத்துன்பம் வந்தாலும் துவண்டிடாதவாறும், எவ்வின்பம் வந்தாலும் ஆர்ப்பரித்திடாதவாறும் மனதினை பதப்படுத்தி தந்திருக்கின்றன. இந்த வருடமும் நான் யாருடைய தனிப்பட்ட சுதந்திரத்திலும் தலையிடவில்லை, எவர் தவறினை பற்றியும் விமர்சிக்கவில்லை. யாரையும் உற்றுப் பார்த்துக் கொண்டு திரியவுமில்லை. மனிதர்களை அவர்களாகவே ஏற்றுக் கொண்டேன். இயலுமான வரை அவர்களை புரிந்து கொண்டேன். பல மதங்களில், பல மொழிகளில், பல நாடுகளில் எனக்கு பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். இயன்றவரை என்னை சுற்றியிருந்த Negative Vibs கொண்ட பலரை விட்டும் நான் என்னை தூரமாக்கி வைத்திருந்தேன். வஞ்சிக்க மட்டும் வருகின்றவர்களை விட்டும் நகர்ந்து போனேன். இந்த வாழ்க்கை சந்தோசமாய் இருக்கிறது. நாளை இவ்வருடம் என்பது கடந்த வருடமாய் காலாவதியாய் போய்விட்டிருக்கும். வாழ்வு மீட்டப்படும் போதெல்லாம் இவ்வாண்டு மீட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். இவ்வாண்டு முழுவதுமாய் வாழ வைத்த இறைவனுக்கு நன்றிகள்... ❤❤ புதிய வருடம் நமக்கெல்லாம் நல்லதாய் அமைய இறைவனிடம் பிராத்தனை செய்வோம்... நம்பிக்கை தான் வாழ்க்கை. அந்த நம்பிக்கை யை நம் மீதும் நம்மை சுற்றி இருப்பவர்களான நம் குடும்பத்தார் மேலும் நம்மை படைத்த இறைவன் மீதும் வைத்து புத்தாண்டில் கால் பதிப்போம். நலம் பெறுவோம். விடைபெற நினைப்பது இரவுகள் மட்டுமல்ல! கடந்த ஆண்டின் விடியல்களும் தான்! காலச் சக்கரத்தின் கட்டாய சுழற்சியில் கைகளை அசைத்தே விடை பெறுகிறது! இதயங்கள் தாங்கி உதயமாய் நின்ற இந்த ஆண்டு ...! வேதனைகள் தந்தாலும் வெற்றிகள் கிடைத்தாலும்...! மலரவிருக்கும் புத்தாண்டு வசந்தமாய் அமையட்டும்!!! என்ற நம்பிக்கையில் விடை கொடுத்தே மனம் மகிழ்வோம்!!! வசந்தமாய் விடியல்கள் தொடர்ந்து வரும்!!! புதிய இலக்கு நோக்கிய வெளிச்ச விடியல் தொடரட்டும்... நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!! #மனதின்ஓசைகள் #மஞ்சுளாயுகேஷ்


Comments

சொல்லப்பட்ட விஷயங்களை திரும்ப சொல்லி, சொல்லி நீண்ட கட்டுரையாக ஆக்குவது உங்கள் எண்ணமா? படிக்கும்போது புதிய விஷயங்கள் கிடைக்கப்பெறாமல் அயற்சி ஐற்பட்டது. வார்த்தைகளை நயமாக கோர்க்க கற்றுக் கொண்டீர்கள் Short& interestingகா எழுத ஆரம்பியுங்கள். எழுதியதை நீங்கள் திரும்ப படித்தாலே பல வார்த்தைகளை நீக்க உதவியாக இருக்கும்.

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி