தேடல்/கவிதை /கலா
தேடல்
கவிதை/
நம் வாசகர்களுக்கு ஒரு
புதிய அறிமுகம் கவிஞர் கலா
தேடல்
தயங்கி நிற்கிறேன்
தடம் பார்க்கையில்
நீ என்னை கடக்கையில்
ஏதோ தடுமாற்றம்
என்னுள் ..
வேகமாக செல்ல
நினைக்கிறேன்
உன்னை காணமால்
வீசும் காற்றில்
கடக்கின்றன
நிழலாக உன்
நினைவுகள்..
வாய் பேச மறந்தேன்
உனது விழிகளை
கண்டவுடன் ஏன்
இந்த மின்னல் வேக
தாக்குதல்..
மழையில் கரைய
நினைத்தேன் ஏனோ
உன் நினைவழையில்
கரைந்து கொண்டிருக்கிறேன்..
கரை சேர வருவாயா
கண்மணியே ..
--கலா
Comments