விந்தை மனிதர்கள்! வேடிக்கை மனிதர்கள்!

1)விந்தை மனிதர்கள்!

வேடிக்கை மனிதர்கள்!

2)

சிந்தணையில் பழுதானவர்கள்!

சமுதாய

நலனா?

அது என்ன?

புதிதாக வந்த 

பத்திரிக்கையா?

எனக் கேட்பார்கள்

3)

ஏழைக்கு உணவளிக்க வேண்டும் 

என்றால்

எனது மகனுக்கு 

பன்னீர் பட்டர் மசாலாவுக்கும்

பால்கோவாவுக்கும்தான் பணம் இருக்கும் என்பார்கள்

4)

என்  மனைவி

மகன், 

மகள்  

எனது உறவினர், எனது  உடமை

என பலகாலும் பேசித் திரிவார்கள்

5)

விந்தை மனிதர்கள்!

 வேடிக்கை மனிதர்கள்!

6)

எனது வாரிசுகள் 

பல பட்டங்கள் பாரினில் பெற்றவர்கள் எனப் பெருமை பேசியே திரிவர்

எனது வாரிசுகள் 

பாரினில் பச்சை நிறக் கார்டுகள் வைத்திருப்பவர்கள்

 எனப் பிதற்றுவர்கள்!

7)

விந்தை மனிதர்கள்! வேடிக்கை மனிதர்கள்!

8)

பட்டம் பெற பட்டினியாக பலகாலம் கிடந்து தன் மகனை படிக்க வைத்த பரம ஏழை 

தன் ஊரில் இருந்தாலும் உதவிடார்

9)

தான் வைத்திருக்கும் 

பாரின்

காருக்கு  பெட்ரோலுக்கு  ஆண்டுக்கு

பல லட்சங்கள் செலவழிப்பார்கள்.

ஏழைக்கு ஓரு நாளும் உணவளிக்கார்!

10)

விந்தை மனிதர்கள்!

வேடிக்கை மனிதர்கள்!

11)

அரசு பணியில்

எப்போதும் சட்டம் பேசுவார்!

சட்டம்தான் பேசுவார்

சட்டம் மட்டுமே 

பேசுவர்

அதில் வழிவகை என்றும் காணார்.

சமுதாய நலன் கருதிய கோப்புக்கள் வந்தால் மின்னல் போல் முடியாது 

எனக் கோப்புக்களை தள்ளிவிடுவார்கள்!

12)

தள்ளாத வயதானாலும்

பழக்க தோஷத்தில்

 நலன் சார்ந்த திட்டத்தை தூங்காமல் எதிர்பார்கள்!

தான் நடந்தவந்த பாதையை மறப்பதில் கெட்டிக்கிறார்கள்!

13)

விந்தை மனிதர்கள்!

வேடிக்கை மனிதர்கள்!

14)

"ஆங்கோர்

ஏழைக்கு எழுத்தறித்நவன் இறைவனாகும்

என்ற மொழிதனை 

சாதூர்யமாக மறந்து விட்ட சழக்கர்கள் தாம் அவர்கள்!

15)

விந்தை மனிதர்கள்!

வேடிக்கை மனிதர்கள்!

16)

நாளும் தேவையற்ற வீண் பேச்சு பேசி கழிப்பர்

தான்தான் உயர வேண்டும்

என் பிள்ளைகள்தான் உயர வேண்டும்

 என்று சதாகாலமும் எண்ணுவர்

அவ்வாறே செயல்படுவார்

தவறில்லைதான்

!

ஆனால் 

அதை தாண்டி எதையும் 

எள்ளவும்

சிந்திக்கமாட்டார்கள்

சிந்தித்தால்தான் செயல்படமுடியும்?

என்னே! அவர்கள் வாழ்க்கை முறை!

17)

தான் 

மீளா துயில் கொள்ளும்காலை

 தான் பெற்றெடுத்த பிள்ளைகள் ஓரு நாளும் 

சோறுட்டாமல் இருந்தாலும்

அவர்கள் வந்து சேர பல நாளாகும்   என்றாலும்

அக்கம்பக்கத்தவர் உதவுவர்

 என்ற எண்ணாமில்லாமல்

பக்கத்தில் வசிப்பவரைபாகிஸதானியன் 

என்றும் பகைவன் என்றே எண்ணுவார்கள்!

18)

வீணாய் நாளாய் கழித்திடுவர்

நாடு நலன் என  துளியளவும் கிடையாது

அதனாலான்றோ 

அவன் பெற்ற 

 பிள்ளைகளும்

அவர்களை

உதாசீனம் செய்வர்கள் !

இருந்தாலும் 

திருந்திடார்!

19)

பல கால் பழக்கத்தை

மாற்றிடார்!

20)

விந்தை மனிதர்கள்!

வேடிக்கை மனிதர்கள்!

21)

யுகப் புரட்சியாளன்

*காக்கை குருவி எங்கள் ஜாதி என்றவன்*

*தனியொருவனுக்கு உணவில்லையெனின் இந்த ஜெகத்தினை அழித்திடுவேன்*

 என்றவன்

*ஏழைக்கோர் கல்வி* என்றவன்

*எழுத்தறித்தவன் இறைவனாகும்* 

என்றவன்

*தன்னலமற்றவன்*

*பாரதி* எனும்

அவன் *மீண்டும் பிறந்துவந்தலாவது* *மாறுவார்களா?*

*இந்த*

*விந்தை* *மனிதர்கள்!* 

*வேடிக்கை மனிதர்கள்!*

--பன்னீர் செல்வன்

Comments

Unknown said…
Heart touching , Life reality ,poetic verses presented in a very simple and lucid manner.
💐Kudos to mr. K.p.p Pannerselvan AR retd Sir for elucidating the Actual reality of Human beings,
To realize ALONE ,What is Life is at the end of his last breath only.
And so right from Our Birth To Death, we shall try to lead a purposeful and useful life to both to our family inter winded with the whole SOCIETY as a whole.
💐Once again Thanks the author and publisher cum chief editor for this publication of life reality simple poetic verses collection.💐
N Murali
Retd DR
Unknown said…
Heart touching , Life reality ,poetic verses presented in a very simple and lucid manner.
��Kudos to mr. K.p.p Pannerselvan AR retd Sir for elucidating the Actual reality of Human beings,
To realize ALONE ,What is Life is at the end of his last breath only.
And so right from Our Birth To Death, we shall try to lead a purposeful and useful life to both to our family inter winded with the whole SOCIETY as a whole.
��Once again Thanks the author and publisher cum chief editor for this publication of life reality simple poetic verses collection.��

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி