பஞ்சு போன்ற சுவையான ரவா இட்லியை சுலபமாக வீட்டிலேயே செய்திட வழக்கமான இட்லி, தோசை என்று சமைத்து கொடுக்காமல் அதே இட்லியை சற்று வித்தியாசமான முறையில் சுவையாக செய்து கொடுத்து பாருங்கள். நான்கு இட்லி சாப்பிடுபவர்கள் கூட இன்னும் இரண்டு இட்லி வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இதனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட வெங்காய சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி இவற்றில் எதை வேண்டுமானாலும் சேர்த்து தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். இதனை செய்வதற்கு நேரமும் மிகவும் குறைந்த அளவு தான் தேவைப்படும். இந்த ரவா இட்லி செய்வதற்கு சேர்க்கப்படும் பொருட்களும் வீட்டில் எப்பொழுதும் பயன்படுத்தும் பொருட்கள் தான் தேவையான பொருட்கள்: ரவை – ஒரு கப், தயிர் – முக்கால் கப், நெய் – ஒன்றரை ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – ஒரு கொத்து, இஞ்சி சிறிய துண்டு – 1, சோடா உப்பு – கால் ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து. செய்முறை: முதலில் கறிவேப்ப...