இதுவரை இல்லாத சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட Flipkart.. வாடிக்கையாளர்கள் செம ஹேப்பி
ஹை எண்ட் மாடல் ஃபோனை வாங்கும் ஒரு வாடிக்கையாளர், அந்த டிவைஸை 15 நாட்களுக்குள் ரிட்டர்ன் செய்வதோடு வாங்கிய மதிப்பில் முழுப் பணத்தையும் திரும்ப பெற (refund) முடியும்.
விலையுயர்ந்த பிரீமியம் ஸ்மார்ட் ஃபோன்களை வாங்கும் இந்திய வாடிக்கையாளர்கள் அதனை பயன்படுத்திய 15 நாட்களுக்குள், வாங்கிய போது செலுத்திய முழு பணத்தையும் திரும்ப பெறுவதற்கான ‘லவ் இட் ஆர் ரிட்டர்ன் இட்’ (Love it or return it) என்ற புதிய திட்டத்தை பிளிப்கார்ட் சமீபத்தில் அறிவித்து உள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் பிளிப்கார்ட் மூலம் ஹை எண்ட் மாடல் ஃபோனை வாங்கும் ஒரு வாடிக்கையாளர், அந்த டிவைஸை 15 நாட்களுக்குள் ரிட்டர்ன் செய்வதோடு வாங்கிய மதிப்பில் முழுப் பணத்தையும் திரும்ப பெற (refund) முடியும். இந்த முன்னோடி திட்டத்தின் ஒரு பகுதியாக, பிளிப்கார்ட் சாம்சங் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. மேலும் Galaxy Z Fold 3 மற்றும் Z Flip 3 ஆகிய இரண்டு பிரீமியம் ஸ்மார்ட் ஃபோன்களும் Love it or return it திட்டத்தின் கீழ் பிளிப்கார்ட்டில் வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரீமியம் ஸ்மார்ட் ஃபோன்களுக்கான 'Love it or return it' திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.
‘Love it or return it’ திட்டம் என்றால் என்ன?
நீங்கள் ஒரு விலையுயர்ந்த ஸ்மார்ட் ஃபோனை வாங்கும் போது, செயல்திறன் அல்லது வேறு ஏதாவது காரணங்களால் அந்த டிவைஸ் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், ரீட்டெயிலரை அணுகி, எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் குறிப்பிட்ட தயாரிப்பை திருப்பித் தரலாம் என்ற உத்தரவாதம் உங்களுக்கு கிடைத்தால் எப்படி இருக்கும். இந்த அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் முயற்சியாகவே Love it or return it திட்டம் இருக்கிறது. Flipkart மூலம் நீங்கள் high-end ஃபோன் ஒன்றை வாங்கிய பிறகு, தொடர்ந்து அந்த ஃபோனை நீங்கள் பயன்படுத்துவதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய உங்களுக்கு 15 நாட்கள் வரை அவகாசம் கிடைக்கும்.
குறிப்பிட்ட ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்திய பிறகு நீங்கள் திருப்தியடையவில்லை என்றால், ஃபோனில் பிரச்சனைகள் ஏதுமின்றி நன்றாக வேலை செய்யும் நிலையில் இருந்தாலும் கூட டிவைஸை Flipkart-டிடம் திருப்பி அனுப்பலாம். இந்த ரிட்டர்ன் முயற்சியின் போது டிவைஸிற்கு சேதம் ஏதும் ஏற்படாமல் இருக்கிறதா, முழுமையாக வேலை செய்யும் நிலையில் உள்ளதா என்பது உள்ளிட்ட சில குவாலிட்டி செக்கப்பிற்கு பிறகு, யூஸர்கள் ஸ்மார்ட் ஃபோன் வாங்க செலவிட்ட முழுப் பணத்தையும் திரும்ப பெறுவார்கள்.
இந்த ரீஃபன்ட் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்தப்படும். பெங்களூரு, ஹைதராபாத், புனே, டெல்லி, மும்பை, குருகிராம், அகமதாபாத், கொல்கத்தா, சென்னை மற்றும் வதோதரா ஆகிய இடங்களில் இந்த Love it or return it திட்டம் தற்போது லைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் பிரீமியம் ஸ்மார்ட் ஃபோன்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நேரத்தில் வந்துள்ள இந்த Love it or return it திட்டம், வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் என்று குறிப்பிடுகிறது.
இந்த புதிய திட்டத்தைப் பற்றி பேசிய Flipkart, Mobiles-ன்மூத்த இயக்குனர் ஆரிஃப் முகமது , "நுகர்வோருக்கு அவர்கள் விரும்பும் ஸ்மார்ட் ஃபோனை நேரில் எக்ஸ்பீரியன்ஸ் செய்யும் ஆப்ஷன் மற்றும் அது அவர்களுக்கு சரியான தேர்வா என்பதை தீர்மானிக்க இதன் மூலம் நாங்கள் வாய்ப்பை வழங்குகிறோம்" என்று குறிப்பிட்டார்.
Comments