உலகமெல்லாம் தீப ஒளி பரவ
உலகமெல்லாம் தீப ஒளி பரவ
நல்லன எல்லாம் நடக்க
ஆளுவோர் மனம் மாற
மக்கள் நலமொன்றே நினைக்க
வீணாகும் தண்ணீரை சேமிக்க
அதன் மூலம் நல்ல வளம் பெருக
பொது ஜனமும் தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்க
வன்முறை ஒழிய
தீவிரவாதம் அழிய
எங்கும் அமைதி நிலவ
உலக மக்கள் நிம்மதியான வாழ்வு வாழ
இந்நன்னாளில் எங்கும் ஒளி பரவட்டும்
சாந்தி நிலவட்டும்
அதற்கு
ஏற்றுக தீபம்...போற்றுக தீபம்...
எந்த ஒரு தெய்வத்தின் அருளை பெற வேண்டுமானாலும் முதலில் குலதெய்வத்தின் அருளை பெறுவது அவசியம்.
இவ்வளவு சக்தி வாய்ந்த குலதெய்வத்திற்கு எந்த விளக்கு ஏற்றி வழிபடுவதால் பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
எந்த ஒரு நல்ல காரியத்திற்க்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து முடித்துவிட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும்.
நீங்கள் கேட்டது அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதில் உங்கள் குலதெய்வத்தை தவிர வேறு எந்த தெய்வமும் நிறைவேற்றாது.
வாழ்க்கையில் எல்லாமே நல்லபடியாக நடக்கவேண்டும் தடைகள் நீங்கவேண்டும் என்று நினைத்தால், நாம் குலதெய்வத்திற்கு மாவிளக்கு ஏற்றுவது சகலவித நன்மைகளை பெற்றுத் தரும்.
பெரும்பாலும் வீட்டில் விளக்கு ஏற்றும்போது, பித்தளை, வெள்ளி, மண் விளக்குகளை ஏற்றி வழிப்படுவோம்.
ஆனால் குலதெய்வத்திற்கு கண்டிப்பாக மாவிளக்குதான் ஏற்றவேண்டும்.
மாவிளக்கு தயாரிக்க பச்சரிசியை ஊறவைத்து இடித்து அல்லது அரைத்த பின் சலித்து, இதனுடன் வெல்லம் பாகு எடுத்து அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்தும் பிசைந்து மாவிளக்கு செய்யலாம்.
இதனுடன் சிறிது நெய் சேர்த்துக்கொள்வது நல்லது. இந்த விளக்கை மாதம் வரும் பெளர்ணமி நாள்களில், இல்லை என்றால் வருடத்துக்கு ஒரு முறையாவது குலதெய்வத்திற்கு வாழை இலையில் மாவிளக்கு ஏற்றி, படையலுடன் வழிபடுவது சிறப்பானது.
இவற்றை இரட்டையாக தீபம் போடுவது நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
அதிலும் பசு நெய் போட்டு ஏற்றுவது உத்தமம். வீட்டில் கணவன்-மனைவி இடையே சண்டை சச்சரவு அதிகம் இருந்தாலும் உடனே தீர்வு உண்டாகும், குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பேர் புகழுடன் செல்வம் உண்டாக்கும் எனவும் கூறப்படுகிறது.
உங்களுக்கு தீராத பிரச்சினைகள் இருந்தால் அதை தீர்த்துவைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Comments