வெள்ளை குருமா

 பத்தே நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த வெள்ளை குருமாவை ஒரு முறை செய்து பாருங்கள்




காலை உணவாக இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் என செய்தாலும் குருமாவுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடும் சுவையே தனி தான். இவ்வாறு காலை மற்றும் இரவு உணவுக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட குருமா செய்யும் பொழுது எப்பொழுதையும் விட வீட்டில் உள்ளவர்கள் சற்று அதிகமாகவே சாப்பிடுவார்கள். குருமா செய்வது என்பது மிகவும் நேரம் செலவாகும் வேலை என்று நினைத்துக் கொண்டு சுலபமாக சட்னியை செய்து விடுகிறார்கள். ஆனால் சட்னி செய்யும் அதே நேரத்தில் இந்த எளிமையான குருமாவையும் செய்து விட முடியும். அவ்வாறு ருசியான இந்த குருமாவை எப்படி பத்தே நிமிடத்தில் செய்ய முடியும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்


தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 1, பொட்டு கடலை – 3 ஸ்பூன், தேங்காய் – கால் மூடி, பூண்டு – 6 பல், இஞ்சி சிறிய துண்டு – 1, பச்சை மிளகாய் – 5, கிராம்பு – 3, பட்டை சிறிய துண்டு – 1, சோம்பு – 1 ஸ்பூன், கல்பாசி – அரை ஸ்பூன், முந்திரி – 4, எண்ணெய் – 5 ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்த மல்லி தழை – ஒரு கொத்து.


செய்முறை: முதலில் கால் மூடி தேங்காயைத் காய்துருவலை பயன்படுத்தி துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு பச்சை மிளகாயை இரண்டாக உடைத்து வைக்க வேண்டும்.\


அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைத்து, அதில் துருவிய தேங்காய், நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, பொட்டுக்கடலை 3 ஸ்பூன், 6 பல் பூண்டு, சிறிய துண்டு இஞ்சி, பட்டை சிறிய துண்டு, 3 கிராம்பு, 4 முந்திரி மற்றும் 3 பச்சை மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை அடுப்பை சிம்மில் வைத்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் இவற்றை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும் பிறகு மீண்டும் அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை வைத்து ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும் என்னை நன்றாக காய்ந்ததும் சோம்பு மற்றும் கல்பாசி சேர்த்து தாளிக்க வேண்டும் பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கி அதன்பின் இரண்டாக உடைத்த இரு பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பின் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டையும் இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கி, ஒன்றரை ஸ்பூன் உப்பு மற்றும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். ஐந்திலிருந்து பத்து நிமிடம் நன்றாக கொதித்த பின்னர் இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி