காய்கறிகளின் விலை மேலும் உயரும்
வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு வளாகத்தில் காய்கறிகளின் விலை பலமடங்கு அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி விலை இருமடங்கு உயர்ந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் ரூ.70, பெரிய வெங்காயம் ரூ.60, பீன்ஸ் ரூ.70 , கேரட் ரூ. 90 , பீட்ரூட் ரூ. 40 , கத்தரிக்காய் ரூ.60 ரூபாய் என விற்பனையாகின்றன.
உருளைக்கிழங்கு 40 ரூபாய், அவரைக்காய் 80 ரூபாய், பச்சை மிளகாய் 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. கனமழை தொடர்ந்து, வரத்து குறைந்தால் காய்கறிகளின் விலை மேலும் உயரும் என கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Comments