ஸ்நானப்பொடி
..
காந்தல் பூ அதிகமாய் பூத்து குலுங்கும் மாதமான கார்த்திகை முடிந்து , குளிர்ச்சியாமன மாதமான மார்கழி பிறக்க இன்னும் இந்த ஒரு மாதமே உள்ளது..
மார்கழி என்றாலே ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரே அனைவரது நினைவுக்கும் வருவார்.. ஸ்ரீ ஆண்டாளின் நினைவோடு ஸ்ரீ தாயாரின் நீராட்ட உத்ஸவமும் நம் நினைவில் வரும் தானே??!!!
நீராட்ட உத்ஸவம் நினைவில் வருகையில் நிச்சயம் ஸ்நான பவுடர் நினைவில் வரும்..
இதை எப்படி தயாரிக்கிறார்கள்? யார் தயாரிக்கிறார்கள்? எத்தனை ஆண்டுகளாக தயாரிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வோமா?
நம் பீப்பிள் டுடே வாசகர்களுக்காகவே கடை நிர்வாகி திரு.சுதர்சனை சந்தித்தோம்..
இளைஞரான சுதர்சன் அவர்கள் நம் கேள்விகளுக்கு மிகவும் பொறுப்பாகவும், பொறுமையாகவும் பதில் அளித்தார்..
1946 ஆம் ஆண்டு முதல் கிட்டதட்ட நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாக இருந்தே பாரம்பரியமாக நான்கு தலைமுறைகளாக இன்றளவும் ஒரே குடும்பமே தயாரித்து வருகின்றனர்..
மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா.. ! ஆனால் இது தான் உண்மை..
ஆமாம் குளியல் பொடி, நலுங்கு மாவு என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த ஸ்நானப்பொடி தயாரிப்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றனர் இவர்கள்..
இந்த பொடியில் கஸ்தூரி மஞ்சள், வெட்டி வேர், பன்னீர் ரோஜா இதழ்கள், இன்னும் பல அரிய மூலிகைகளை சரியான விகிதத்தில் கலந்து முறைப்படி பக்குவப்படுத்தி தயார் செய்கின்றனர்..
இந்த ஸ்நானப்பவுடர் தெய்வங்களுக்கு திருமஞ்சனம் என சொல்லப்படும் நீராட்ட வைபவத்தின் பொழுது பயன்படுத்தப்படுகிறது..
அது மட்டுமல்ல பச்சிளம் குழந்தைகள் முதல் அனைவரும் இந்த ஸ்நானப்பொடியால் குளிப்பதால் இது சிறந்த ஒரு நறுமணம் மிக்க வாசனை பொடியாகவும் திகழ்கிறது..அது மட்டுமில்லை இதில் சேர்மானங்களாக சேர்க்கப்படும் மூலிகை இதழ்கள் சிறந்த்தோர் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது..
இவர்கள் இந்த ஸ்நானப்பொடி தயாரிப்பை ஒரு வேள்வி போல் மிகவும் கவனத்துடன் செய்வதால் இதன் தரம் இன்றளவும் சிறப்பு மிக்கதாக இருக்கிறது.. இவர்களின் இந்த ஸ்நானப்பவுடர் தரத்தின் மிகுதியால் கடல் கடந்தும் செல்கிறது..!
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் இவர்கள் கடைக்கு ஒரு செல்ல பெயர் உண்டு " தாடி கடை"..
குழந்தை பிறந்தவுடன் " தாடி கடையில் போய் ஸ்நானப்பவுடர் " வாங்கி வந்து குழந்தையை குளிப்பாட்டும் வழக்கம் இன்றளவும் உள்ளது..
நீங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வருகையில் ஆண்டாள் தரிசனம் முடித்துவிட்டு நாவிற்கு இனிமையான பால்கோவா சுவைப்பதோடு இந்த பாரம்பரிய கடைக்கும் சென்று வாருங்கள்..சிறிய கடை ஆனால் தரத்தில் உயர்ந்த கடை என்பதை உணர்வீர்கள்..
இன்னும் நிறைய செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
நன்றி..
#ஜெயந்தி சதீஷ்
.,ஸ்ரீவில்லிபுத்தூர்
Comments