நேர்மையாக மட்டும் எடுத்திருந்தால்.. ஜெய்பீம் வேற லெவல்
நேர்மையாக மட்டும் எடுத்திருந்தால்.. ஜெய்பீம் வேற லெவல் படம்.. லட்சுமி ராமகிருஷ்ணன்
ஜெய் பீம் படத்தின் உண்மைக் கதையை நேர்மையாக எடுத்திருந்திருக்கலாம். ஆனால் படம் எடுத்தவர்கள் அதை செய்யவில்லை என இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
நடிகர் சூர்யா நடித்து ஓடிடியில் ரிலீஸான ஜெய்பீம் படத்தில் ஒரு காட்சியில் வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசம் காட்டப்பட்டதாக வன்னியர் சங்கத்தினர் படக்குழுவினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
நடிகர் சூர்யா நடித்து ஓடிடியில் ரிலீஸான ஜெய்பீம் படத்தில் ஒரு காட்சியில் வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசம் காட்டப்பட்டதாக வன்னியர் சங்கத்தினர் படக்குழுவினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
அது போல் உண்மைக்கதையில் இன்ஸ்பெக்டரின் பெயர் வேறு மதத்தினரின் பெயராக இருக்கும் நிலையில் படத்தில் அவருக்கு குருமூர்த்தி என சூட்டப்பட்டுள்ளது. இதற்கு காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜெய்பீம் படத்தில் எதிர்ப்புக் கிளம்பிய அந்த காட்சியில் ஒரு காலண்டர் குறிப்பிட்ட சமூகத்தினரை சேர்ந்தது என்பது எங்களுக்கு தோன்றவில்லை என இயக்குநர் ஞானவேல் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் குருமூர்த்தி கேரக்டர் குறித்து அவர் எதையும் கூறவில்லை

இதுகுறித்து நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஜெய்பீம் படத்தின் உண்மை கதை நேர்மையாக இயக்கியிருந்தால் அந்த படம் சிறந்த உத்வேகமளிக்கக் கூடிய படமாக இருந்திருக்கும். ஆனால் உண்மைக் கதைக்கு புறம்பாக எடுக்கப்பட்டுள்ளது.
உண்மையாக கடலூரில் ராஜக்கண்ணுவுக்கு எதிராக நடந்த போலீஸ் அராஜகத்திற்கு எதிராக ஜாதி, மத பேதமின்றி பொதுமக்கள் ஒன்று திரண்டனர். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட ஜாதியை தவறாக சித்தரிப்பதை தவிர்த்திருக்கலாம். உண்மைக் கதையை படமாக எடுக்கும் போது ஒரு படத்திற்கு எப்போதும் விவரித்தல் என்பது மிகவும் முக்கியம்.ஆனால் தவறாக விவரித்திருப்பது ஆக்கப்பூர்வமானது அல்ல, பாதிப்பைத்தான் ஏற்படுத்தும் என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது போல் நிறைய பேர் ஜெய்பீம் குறித்து அவர்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளார்கள்.
Comments