மழை, குளிர் கால பிரச்சனைகளுக்கு சூப்பர் தீர்வு

 மழை, குளிர் கால பிரச்சனைகளுக்கு சூப்பர் தீர்வு.. இது மட்டும் இருந்தா போதும்! - 



மழையும், குளிரும் வாட்டி வருகிறது. மழையிலிருந்து நம்மை காத்து கொண்டாலும் இந்த காலத்தில் உருவாகும் சளி மற்றும் ஜலதோஷத்தில் இருந்து தப்பிக்க முடிவதில்லை.


எடுத்தற்கு எல்லாம் மருத்துவரிடம் ஓடத் தேவையில்லை. வீட்டிலேயே தொட்டிச்செடியில் வளர்க்கும் அருமருந்து கற்பூரவல்லி ஒன்றே போதுமானது. இதை விட சளிக்கு அற்புதமான மருந்து வேறு இல்லை என்கின்றனர் சித்த மருத்துவர்கள். கற்பூரவல்லி தேநீர் வைத்து குடித்தால் விடாமல் வரும் தும்மலும் உடனே நின்று விடும்.


மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டைக்கட்டு இவைகளிலிருந்து விடுபட கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிய வேண்டும். இந்த சாறினை சில துளிகளை மூக்கில் விட்டு உறிஞ்ச மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் உடனடியாக நீங்கும். தொண்டையில் படுமாறு விட தொண்டைக்கட்டு, வறட்டு இருமல், சளி தொந்தரவுகளிலிருந்து உடனடி விடுதலை பெறலாம்.


கற்பூரவல்லியின் தண்டுகளை மட்டும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டி தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இதுவே கற்பூரவல்லி தேநீர்.


காலை உணவுக்கு முன் இந்த தேநீரை தயாரித்து குடித்து வந்தால் தலைநீரேற்றம், தலைவலி வருவது நின்று விடும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். தலையில் நீர்கோர்த்து கடுமையான தலைவலி, அடிக்கடி தும்மல், மூக்கில் அரிப்பு இவைகளுக்கு கற்பூரவல்லி தேநீர் அருமருந்து.

கற்பூரவல்லி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். மேலும் இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி