நான்கு சுவற்றுக்குள் வைத்து கட்டுப்படுத்தச் சொன்னேன்
நான்கு சுவற்றுக்குள் வைத்து கட்டுப்படுத்தச் சொன்னேன்... மடை திறந்த மதன் ரவிச்சந்திரன்..!
பாஜக தமிழக செயலாளர் கே.டி.ராகவன் மீது பாலியல் வீடியோ விவகாரத்தை வெளியிட்டு இருந்தார் யூடியூபர் மதன் ரவிச்சந்திரன். இதனையடுத்து கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இது குறித்து விசாரணை நடத்தப்படும். ஆனால் பாஜக, மதனுக்கும், வெண்பாவுக்கும் பாதுகாப்பு சம்பந்தமாக எந்த உத்தரவாதமும் தராது. அவரவர் செய்த செலுக்கு அவரவர்களே பொறுப்பு என அறிவித்து இருந்தார். இந்நிலையில் பாஜக தலைவர்களின் பாலியல் ரீதியான புகார்களை விசாரிக்க மலர்கொடி தலைமையில் ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனையடுத்து பாஜகவில் உறுப்பினராக இருந்த மதன் ரவிச்சந்திரனும், வெண்பாவும் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மதன் டையரி என்கிற யூடியூப் பக்கமும் முடக்கப்பட்டது. தற்போது மதன், பாஜக தலைவர் அண்ணாமலை மற்றி பற்றிய தகவல்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார்
அதில், ‘’பல பெண்களின் பெரிய பிரச்னைகளுக்கு அண்ணாமலை காரணமாக இருக்கப்போகிறார். கே.டி.ராகவனின் வீடியோவை அண்ணாமலைதான் வெளியிடச் சொன்னார். வீடியோ வெளியான பின் கமிட்டி அமைக்கச் சொல்லி வெண்பாவிடம் தேன் கேட்டார். வெண்பா தான் மலர்கொடி கமிசன் அமைக்க ஐடியா கொடுத்தார். அப்போது, வெண்பாவிவிடம் சிஸ்டர் நீங்க ரொம்ப கவனமா இருக்கணும். முகத்தை எங்கும் காட்டிக்கொள்ள வேண்டாம். ஒருவரம் அப்படித்தான் போகும். நிறைய உழைக்க வேண்டியது இருக்கு. இந்த ஸ்டிங்கில் இருக்கிற ஆட்களையெல்லாம் தூக்கிட்டா சரியாகி விடும்னு நினைக்கிறேன். இவங்கள்லாம் கட்சி லேபிளை வைத்து தானே தப்பு செய்கிறார்கள் என வலியுறுத்தி இருக்கிறான். இவனை மாதிரி நம்பிக்கை துரோகிகள் கட்சியை மொத்தமாக அழித்து விடுவார்கள். அதைவிட இவனை மாதிரி மனிதர்கள் வாழவே கூடாது.
எத்தனை பெண்கள் இந்த வீடியோவால் பாதிக்கப்படுவார்கள். ஒரு கமிட்டியை வைத்து நாலு சுவற்றுக்குள் வைத்து கட்டுப்படுத்துங்கள் என்று நான் சொன்னேன். ஆனால் விளையாட்டுத்தனமாக இந்த வீடியோவை எடுத்து வெளியிடுங்கள் எனக் கூறுகிறான். நானும் பெண் குழந்தைகளெல்லாம் வைச்சிருக்கேன். இந்த வீடியோவை போட்டு விட்டுவிடுங்கள்னு சொல்றான். இப்படி பேசி வழியனுப்பி வைத்த ஒருத்தன் 12 மணி நேரத்தில் மாற்றி அறிக்கை வெளியிடுகிறான் என்றால் இவனை எல்லாம் எப்படி நம்புவது.?’’எனக்கூறும் மதன், இடையிடையே அண்ணாமலையுடன் பேசிய ஆடியோக்களையும் வெளியிட்டுள்ளார். கே.டி.ராகவன் வீடியோவை வெளியிடச் சொன்னதே இந்த அண்ணாமலைதான்’’ என மதன் குற்றம்சாட்டியுள்ளார்.
நன்றி
https://tamil.asianetnews.com/
Comments