தீபம் பேசுகிறது./பிருந்தா சாரதி கவிதைகள்

 




*

காட்டுத்தீயை

வீட்டு விளக்காய்

கட்டுப்படுத்திக் கொடுத்தவர் எவரோ அவரே விஞ்ஞானி

அவரை வணங்குவோம்.

*⭐

கூர்ந்து கவனி 

தீபம் பேசுகிறது.

*⚡

தீயின் புன்னகை

தீபம்.

*🌟

திரி காம்பு

சுடர் மொட்டு.

*🌙

மலர்கள்

தாவர விளக்குகள்

விழிகள் 

மாமிச விளக்குகள்.

*🌄

வெளியே எத்தனை

விளக்குகள் எரிந்தாலும்

உன்னைப் பிரகாசமாக்குவது

உனக்குள் எரியும் சுடர்தான்.

*🌋

ஒரு

விதைக்குள் 

எத்தனை மரங்களோ

ஒரு சுடருக்குள்

எத்தனை

விளக்குகளோ?

*🎇

ஒளி இல்லாமல் 

ஒளிவட்டம் இல்லை.

*💥

உன் வானில் 

நீயே கிழக்கு

உன் பாதைக்கு

நீயே விளக்கு.

*💢

நீ விளக்கென்றால்

இன்னொரு விளக்கை

ஏற்றி வை.

*✨

(#இருளும்ஒளியும் நூலில் இருந்து )

*

நண்பர்கள் அனைவருக்கும்

#தீபத்திருநாள் #வாழ்த்துக்கள்☀️

*பிருந்தா சாரதி


*

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி