மஞ்சுளா கோபி

 மஞ்சுளா கோபி





இரண்டாயிரம் பேருக்கும் மேலே முக நூலில் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு சில நூறு நண்பர்கள் மட்டுமே அதுவும் இலக்கிய உலகத்துக்கு வெளியே இருக்கறவங்க மட்டுமே.... புதிய நூல் வரவுக்கு ஆதரவுக் கரம் கொடுப்பார்கள் போல் தெரிகிறது.
முக்கியமாக தமிழில் தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பவர்கள், ஏற்கனவே இலக்கிய உலகில் தனக்கென தனியாய் முத்திரை பதித்துக் கொண்டவர்கள், இலக்கிய குழுக்கள், இன்னும் சில இலக்கிய மேதாவிகள் இவர்கள் காட்டும் அலட்சியம் எனக்கு நன்றாகவே இவர்களை அடையாளம் காட்டுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் சக படைப்பாளிகளை வரவேற்காத இவர்களின் இலக்கிய படைப்புகளை எவ்வாறு நம்புவது?
எழுத்து வாழ்க்கை சொல் செயல் எல்லாம் ஒரே நேர்கோட்டில் அமைவது இக்கால இலக்கிய வாதிகளிடம் காண்பது அரிது. ஒரு படைப்பை மனமுவந்து வரவேற்கும் நல்ல இதயங்கள் இருக்கிறார்கள்.
ஒரு நல்ல இலக்கியவாதி நல்ல வாசகராகவும் இருக்க வேண்டும். புதிய படைப்புகளை மனமுவந்து வரவேற்கும் இடத்திலிருந்துதான் ஒரு படைப்பாளி அறியப்படுகிறார்.
அதுவே நல்ல ஆரோக்கியமான இலக்கியச் சூழலை உருவாக்கும்.
இப்படி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் மதுரையைச் சேர்ந்த மஞ்சுளா கோபி.
இவரது கவிதைத் தொகுப்பு ' வாகை மரத்தின் அடியில் ஒரு கொற்றவை' நூல் வெளிவர உள்ளது. ஏற்கனவே ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு உள்ளார். நிறைய எழுத்தாளர்கள் நூல்கள், கட்டுரைகள், கவிதைகளுக்கு விமர்சனம் எழுதுகிறார். பத்து வருடங்களுக்கு முன்பு இவர் கவிதை வெளிவந்த 26 சிற்றிதழ் நூல்களைப் பட்டியல் இடுகிறார். இவரது 'மொழியின் கதவு' நூலுக்குச் 'சக்தி' விருது பெற்றுள்ளார். இன்னொரு மழை, தீ மிதி, ஒரு பொத்தல் குடையும் சில போதி மரங்களும்' ஆகியவையும் இவரது பிற நூல்கள். இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் தனது கவிதைகள் வெளிவந்த சிற்றிதழ்களைச் சேமித்து வைத்துள்ளார். இவரது முகநூல் பதிவுகளில் அதிகம் இருப்பது இவரது கவிதைகளும், பிற எழுத்தாளர்கள், கவிஞர்களின் நூல் விமர்சனங்களும்.

-- 

Kandasamy R

Comments

eraeravi said…
நன்று.பாராட்டுகிறேன்

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி