*கண்களை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க

 *கண்களை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் எளிய வழிகள்..* 



தொற்று பேரிடர் காரணமாக பெரும்பாலானோர் டிவி, மொபைல் ஃபோன் அல்லது லேப்டாப்பில் செலவிடும் நேரம் முன்பை விட பல மடங்கு அதிகரித்து உள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரங்கள் டிஜிட்டல் ஸ்கிரீன் டிஸ்பிளேவை பார்த்து நேரத்தை செலவழிக்கிறோம் என்பதை கணக்கிட்டால் அதிர்ச்சியே மிஞ்சும். ஃபோனை விட்டால் டிவி, டிவி-யை விட்டால் லேப்டாப் என்று மாறி மாறி டிஜிட்டல் டிவைஸோடு நேரத்தை செலவழிப்பதால் உங்கள் கண்கள் எவ்வளவு சிரமத்தை சந்திக்கிறது என்பதை நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?


இந்த கேட்ஜெட்களில் இருந்து வெளிப்படும் ஒளியை தொடர்ந்து பார்த்து கொண்டே இருப்பது நம் கண்களுக்கு தீங்கு ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிக்கலான அதே சமயம் உலகை காண உதவும் அற்புத உறுப்பான கண்ணை சரியான முறையில் கவனித்து கொள்வது அவசியம். நம் கண்கள் ஆரோக்கியமாக இருக்க இயற்கை ஒளி மிகவும் முக்கியம். பார்வை திறனில் சிறியளவில் சிக்கலை உணர்ந்தால் கூட கண் மருத்துவரிடம் செல்வது பார்வை மோசமடைவதை தவிர்க்க உதவும். மேலும் வழக்கமான பரிசோதனைகள் மூலம் அவ்வப்போது கண்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவது நன்மை தரும்.


வேலை பளுவிற்கு இடையே டிஜிட்டல் ஸ்ட்ரெய்னிலிருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க உதவும் சில எளிய வழிகளை தற்போது தெரிந்து கொள்ளலாம்..


* நல்ல கண் பார்வைக்கு வைட்டமின் ஏ அவசியம். எனவே வைட்டமின் ஏ நிறைந்த ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை டயட்டில் சேர்த்து கொள்வது நன்மையை தரும். இது ரோடாப்சின் என்ற புரதத்தின் ஒரு அங்கமாகும். மேலும் இது குறைந்த வெளிச்சத்தில் கண்களை பார்க்க உதவுகிறது.


* தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகள் / ஒளி, குறிப்பாக புற ஊதா கதிர்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் ப்ளூ லைட்ஸ் ஆகியவற்றிலிருந்து உங்கள் கண்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.


* அல்ட்ரா வைலட் மற்றும் லைட்டின் மிகப்பெரிய இயற்கை மூலம் சூரியன் ஆகும். ஆரோக்கியமான அளவு சூரிய கதிர்கள் கண்களுக்கு நல்லது என்றாலும் சூரிய ஒளியை அடிக்கடி நேரடியாக பார்ப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும்.


* LED/LCD உட்பட பல செயற்கை ஒளி மூலங்களுக்கு மத்தியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவை சூரிய கதிர்களை போல சக்திவாய்ந்தவை இல்லை என்றாலும் கண்களுக்கு அருகில் வைத்து கொண்டு நீண்ட நேரம் டிவிக்கள், மொபைல்கள், லேப்டாப்கள், டெஸ்க்டாப்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது ஒட்டுமொத்தமாக கண்களின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்பதால் சில அடி தோராயத்தில் வைத்து பயன்படுத்துவதும், தொடர்ந்து அதிக நேரம் பயன்படுத்தாமல் இருக்க முயற்சிப்பதும் நன்மை தரும்.


* தீங்கு விளைவிக்கும் ஒளியிலிருந்து கண்களை பாதுகாக்க நல்ல தரமான போலரைஸ்டு லென்ஸ்கள்/ ஃபோட்டோக்ரோமிக் / ப்ளூ ஃபில்டர்ஸ்களை பயன்படுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.


* வேலை காரணமாக நீண்ட நேரம் ஸ்கிரீனை பார்க்கும் நபராக இருப்பின் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 வினாடிகளுக்கு 20 அடி தூரத்தை பார்க்க வேண்டும். இந்த 20/20/20 ரூல் கண் தசைகளை ரிலாக்ஸ் செய்கிறது.


* சிகரெட் பழக்கம் பார்வை இழப்பதற்கான வாய்ப்புகளை இரட்டிப்பாக்குகிறது மற்றும் நீரிழிவு தொடர்பான பார்வை பிரச்சனைகளை அதிகரிக்க செய்யலாம் என்பதால் புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.


* உங்கள் மற்றும் குழந்தைகளின் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் எடுக்க வேண்டிய மிக முக்கியமான படி, ஆண்டுதோறும் வழக்கமான கண் பரிசோதனைகளை மேற்கொள்வது. ஏனென்றால் கண்புரை அல்லது கிளௌகோமா போன்ற கண் நோய்களின் ஆரம்ப நிலை அறிகுறிகளை நீங்கள் உணரும் முன்பே மருத்துவரால் அவற்றை கண்டறிய முடியும்.


* கண்ணாடி அணிய நேர்ந்தால் நல்ல தரமான, நம்பகமான பிராண்ட்டின் கண்ணாடி லென்ஸ்களை தேர்வு செய்யுங்கள்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி