டேஸ்டியான இன்ஸ்டன்ட் இட்லி
தயிர் ஒரு கப், ரவை ஒரு கப்… டேஸ்டியான இன்ஸ்டன்ட் இட்லி
ரவை இட்லி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
தயிர் – 1 கப்
ரவை – 1 கப்
தாளிக்க:
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை , கொத்தமல்லி – கையளவு
செய்முறை :
ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்து அதை நன்றாக பிசைந்து அதில், ரவை சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளுங்கள். இந்த கலவை இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலககவும. அதன்பிறகு அடுப்பில் கடாய் வைத்து தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து மாவில் கொட்டி மீண்டும் கலக்குங்கள்.
அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். அதன்பிறகு இட்லி குக்கர் வைத்து தட்டில் மாவை இட்லிக்கு ஊற்றுவது போல் ஊற்றி வைத்துவிட்டு 10 நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும். வெந்திருந்தால் இறக்கிவிடவும். இல்லை என்றால் சிறிது நேரம் கழித்து இறக்கவும்.
சுவையான ரவை இட்லி தயார். இதனை தேங்காய் கெட்டி சட்னி புதினா சட்னி ஆகியவைற்றை சேர்த்து சாப்பிடும்போது தனி சுவை கிடைக்கும்
Comments