ஈ.வெ.ராமசாமி நாயக்கர் - பெரியார் ஆன தினமின்று

 ஈ.வெ.ராமசாமி நாயக்கர் - பெரியார் ஆன தினமின்று





சென்னையில் அதே வருடம் நவம்பர் மாதம், மறைமலை அடிகளின் மகளான நீலாம்பிகை அம்மையார் தலைமையில் நடைபெற்ற தமிழகப் பெண்கள் மாநாட்டில், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின்படி தோழர் ராமசாமியாருக்கு ‘பெரியார்’ என்ற புதுப் பெயர் சூட்டப்பட்டது. இந்த “பெரியார்” பட்டத்தை, அந்த மாநாட்டில் அப்போதைய சென்னை மாநகராட்சியின் முதல் தலித்பெண் துணை மேயர் மீனாம்பாள் சூட்டினார். அன்று அவர் வழங்கிய ‘பெரியார்’ என்னும் பட்டம், காலத்திலும் நிலைத்து நின்று தனக்கெனத் தனிப் புகழைத் தேடிக்கொண்டது!


சென்னையில் இதே நவம்பர் 13- (1938) அன்று நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றி வந்த சமுதாயப் புரட்சிப் பணிகளால் ஏற்பட்டு வந்த மாற்றங்களைப் போற்றி அவருக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் அவர் 'பெரியார்' என அழைக்கப்பட வேண்டுமென்று மாநில பெண்கள் பிரதிநிதிகளாகப் பங்கேற்றவர்களால் முடிவு செய்யப்பட்டது.


தமிழ்நாட்டு பெண்கள் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர் திருவரங்க நீலாம்பிகை அம்மையார் (தமிழறிஞர் மறைமலை அடிகளாரின் மகளார்), மாநாட்டுக் கொடியினை ஏற்றி வைத்தவர் மீனாம்பாள் சிவராஜ், மாநாட்டு திறப்பாளர் பண்டிதை அ.நாராயணி அம்மாள், வரவேற்பு நல்கியவர் வ.பா.தாமரைக் கண்ணியார் (ஜலசாட்சி அம்மையார்). ஈ.வெ.ரா.நாகம்மையார் உருவப்படத்தினை திறந்து வைத்தார்


பார்வதி அம்மையார். மாநாட்டு அமைப்பாளர்கள்: டாக்டர் எஸ்.தருமாம்பாள், மலர்முகத் தம்மையார் (புஷ்பவதி), மூவாலூர் ஆ.இராமாமிர்தம் அம்மையார். விளம்பரச் செயலாளர்: கலைமகளம்மையார் என முழுவதும் பெண்களே ஒருங்கிணைத்து, தமிழ்நாட் டின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்து பெண்கள் பங்கேற்ற மாநாடு அது




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி