சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா






*இந்த ஆண்டின் ஐபிஎல் கோப்பையை வென்று சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.*


 கடந்த மே மாதம் கொரோனா பரவல் காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள், மூன்று மாதங்கள் கழித்து அக்டோபரில் மீண்டும் ஐக்கிய அமீரகத்தில் தொடங்கப்பட்டன. கடந்த ஆண்டில் பிளே ஆப் சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறிய சிஎஸ்கே, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது. கடந்த அக். 15ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில்  4வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது.


இந்த வெற்றிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார்.மேலும் இந்த வெற்றியை சென்னை அணியுடன் சேர்ந்து கொண்டாட காத்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், சி.எஸ்.கே. அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி, இந்திய அணிக்கு மெண்டராக டி-20 உலகக் கோப்பைக்கு நியமிக்கப்பட்டதால் பாராட்டு விழா தள்ளிப்போனது.

தற்போது, உலகக்கோப்பை போட்டிகள் முடிவடைந்து தோனி இந்தியா திரும்பியுள்ளதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா இன்று நவம்பர் 20ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திட்டமிடப்பட்டு இருந்த பாராட்டு விழா தற்போது கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி