கோவிலில் கொடுக்கக் கூடிய அதே சுவையில் புளியோதரை

 கோவிலில் கொடுக்கக் கூடிய அதே சுவையில் புளியோதரை . இப்படி மசாலா அரைத்து ஒரு முறை செய்து பாருங்கள். அற்புதமான சுவையில் இருக்கும்




கோவில் பிரசாதத்தை சாப்பிடுவதில் அனைவருக்கும் அலாதியான விருப்பம் இருக்கும். இதற்காக ஒரு தனிப்பட்ட சுவையான மசாலா ஒன்றை மட்டும் அரைத்து வைத்துக்கொண்டால் போதும். நினைக்கும் நேரத்தில் எல்லாம் சுவையான கோவில் புளியோதரையை வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம்.



புளியோதரை செய்ய தேவையான பொருட்கள்:

 புளி – எலுமிச்சைப்பழ அளவு, வேர்க்கடலை ஒரு ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், உளுத்தம்பருப்பு  ஒரு ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கார மிளகாய் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், நாட்டுச் சர்க்கரை – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, கடுகு – அரை ஸ்பூன், எண்ணெய் – 50 கிராம்.


மசாலா அரைக்க தேவையான பொருட்கள்: 

தனியா– 11/2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன், கடலைப் பருப்பு – 2 ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், எள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, கருவேப்பிலை – கால் கைபிடி, உப்பு – அரை ஸ்பூன்.


செய்முறை: முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் இவை மூன்றையும் தவிர மசாலா அரைப்பதற்கு எடுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் அதில் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.


பிறகு புளியை தண்ணீரில் ஊறவைத்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 அதன்பின் அடுப்பின் மீது கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு வேர்க்கடலை, முந்திரி பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.


பின்னர் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் காய்ந்த மிளகாய் தூள் சேர்த்து லேசாக கலந்து விட்டு, அரை டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும். பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைசல் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இந்த குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன் வடித்து வைத்துள்ள சாதத்தை இதில் சேர்த்து அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

பிறகு கொத்தமல்லி தழை தூவி விட வேண்டும். அதன்மேல் ஒரு கப் சாதத்திற்கு 2 ஸ்பூன் மசாலா சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் கோவில் சுவையில் வீட்டிலேயே புளிசாதம் தயாராகிவிட்டது.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி