’world-wide-web’ இதே நாளில்தான் உதயம்
1991-ம் ஆண்டு பிரிட்டன் நாட்டு கம்ப்யூட்டர் விஞ்ஞானியான டிம் பெர்னெர்ஸ் லீ என்பவர் உலக மக்கள் அனைவருக்கும் பயன்தரும் வகையில் இணையதளம் என்ற ஓர் கம்ப்யூட்டர்களுக்கு இடையிலான வெளிப்படையான ஓர் இணைப்பை அறிமுகப்படுத்தினார். இந்த www இணைப்பின்மூலம் ஆராய்ச்சியாளர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விக்கூடங்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் மிக எளிதாக நடந்து வந்தது.
அதற்கும் முன்னதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகானில் சில தகவல்களை ரகசியமாக பரிமாறிக் கொள்ள இணையம் பயன்பட்டது. எனினும், இந்த கம்ப்யூட்டர்களில் உள்ள தகவல்களை வெளிநபர்கள் பார்க்க அனுமதி இல்லை.
ஆனால், டிம் பெர்னெர்ஸ் லீ கண்டுபிடித்த WWW என்ற அடைமொழியுடன் கூடிய இந்த இணைய இணைப்பு அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் அமைந்திருந்ததால் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் விளைவாக 1993-ம் ஆண்டுவாக்கில் சுமார் 500 இணையதள சர்வர்கள் உலகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், இணையங்களை பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கை வெறும் ஒரு சதவீதமாக மட்டுமே இருந்தது.
ஆனால், இன்றைய நிலவரப்படி ஆறரை கோடி இணையதளங்கள் இயங்கிவரும் நிலையில் கடந்த 6-8-1991 அன்று டிம் பெர்னெர்ஸ் லீ என்பவரால் ஓப்பன் வெளிக்கு வந்த WWW எனப்படும் ’world-wide-web’ இதே நாளில்தான் உதயமாச்சின்னு விக்கீபிடியா சொல்லுது
Comments