இருளர் அறக்கட்டளையே இல்லை... சூர்யா கொடுத்த ரூ.1 கோடி நன்கொடை யாருடைய பணம்
நம்பர் 1 டுபாக்கூர்
.இருளர் அறக்கட்டளையே இல்லை... சூர்யா கொடுத்த ரூ.1 கோடி நன்கொடை யாருடைய பணம்
பழங்குடி இருளர் சமூகத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை கொடுத்ததில் திராவிடத்தனம் செய்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல திரை பிரபலங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியாகி மிகுந்த பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் பழங்குடி இருளர் இன மக்கள் வாழ்க்கையில் சந்திக்கும் நெருக்கடிகள் குறித்த உண்மை சம்பவத்தை எடுத்துரைத்துள்ளது
பழங்குடி இருளர் சமூகத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை கொடுத்ததில் திராவிடத்தனம் செய்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
காசோலையில் இருக்கும் 'PAZHANKUDI IRULAR EDUCATIONAL TRUST' என்ற பெயரில் NGO அரசு இணைய தளத்தில் இல்லை. இது புதிதாக தொடங்கபட்டதா? இன்னும் பதிவு செய்யபடவில்லையா? அதன் நிர்வாக்கிள் யார் யார்? என்பன போன்ற பல சந்தேகங்கள் எழுகிறது.
இதை சூர்யா தெளிவு படுத்த வேண்டும். IRULAR என்ற பெயரில் கொண்ட அறக்கட்டளை இந்தியாவில் எங்கும் இல்லை. அகரம் பவுன்டேசன் நிர்வாகி த.செ.ஞானவேல் தான் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் என்பது கூடுதல் தகவல். இப்படி இருக்கும்போது தன்னார்வலகள் அகரம் பவுண்டேசனுக்கு நன்கொடையாக கொடுத்த பணத்தை தனது பட விளம்பரத்திற்காக கொடுத்துள்ளார் சூர்யா என்கிற சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் அஸ்வத்தாமன் கூறுகையில், ’’அந்த நடிகர் சூர்யாவினுடைய படத்தில் , இந்து அடையாளங்களை பல இடங்களில் மாற்றியும், கொச்சைப்படுத்தியும் தங்களுடைய வன்மத்தைக் காட்டியுள்ளார்கள். உண்மையில் கொலை செய்யப்பட்ட ராஜாகண்ணு வின் மனைவியின் பெயர் பார்வதி ! இந்து அடையாளம் வந்துவிடும் என்பதால் அது வேண்டுமென்றே செங்கேணி என மாற்றப்பட்டுள்ளது.
உண்மையில் செங்கேணி என்பதுவும் இந்துத்துவ பெயர் தான். சம்புவராயர் வம்சத்தில் முக்கிய பெயர் செங்கேணி ! ஆனாலும் பார்வதி என்பது பலராலும் அறியப்பட்ட இந்து பெயர் என்பதால் அது மாற்றப்பட்டுள்ளது. படத்தில் ஒரு சர்ச்சைக்குரிய மெடிக்கலுடைய பெயர்” ஓம் ” என்று வைக்கப்பட்டுள்ளது.
இப்போது வில்லன் வீட்டு காலண்டரில் படத்தை மாற்றவேண்டும் என கட்டாயம் வரும்போது அது லட்சுமி காலண்டராக காட்டப்படுகிறது. உண்மையில் முன்பு இருந்த அக்னி குண்டம் கூட இந்து அடையாளம் தான் ! ஜம்புமகா ரிஷி வளர்த்த யாகத்திலிருந்து ருத்ர வன்னியர் உருவானதாக இந்து தர்மத்தின் 18 புராணங்களில் ஒன்றான அக்னி புராணம் கூறுகிறது. அதுதான் வன்னியர் சங்கத்தினுடைய அடையாளமாக மாறியது.
இந்த சமூகத்தில் மதமாற்றம் மிக குறைவாக இருப்பதால் , இயல்பாகவே மதமாற்ற மாபியாக்களுக்கு இந்த சமூகம் மீது வன்மம் இருப்பது இயல்பு தான். அந்த வன்மம் தான் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு போராடிய சமுதாயத்தையே வில்லனாக சித்தரிக்கசெய்கிறது !
மதமாற்ற மாபியா களுக்கு நெருங்கிய தொடர்புடைய இந்த படத்தினுடைய தயாரிப்பாளர் இதை எல்லாம் ஏன் செய்தார் என்பது உள்ளங்கை நெல்லக்கனி . இவர் இருளர் சமுதாயத்திற்கு 1 கோடி கொடுத்ததாக சொல்வதும் நம்பர் 1 டுபாக்கூர் தான். அவர் அந்த மக்களுக்கு கொடுக்கவில்லை. ஒரு மிஷனரி NGOக்கு தான் கொடுத்தார். அதாவது அங்கிருந்து வாங்கி அங்கேயே கொடுத்துள்ளார்.
இந்த சதி எல்லாம் வெளி உலகிற்கு தெரியாது. இவ்வளவு ஏன் ? அப்பாவி கிருஸ்தவர்களுக்கே கூட தெரியாது. மதமாற்ற மாபியா வேறு அப்பாவி கிருஸ்தவர்கள் வேறு’’ எனத் தெரிவித்துள்ளார்.
news courtesy:https://tamil.asianetnews.com/
Comments