பழசி ராஜா
பழசி ராஜா மரணித்த நாளின்று! கேரளமண்ணிலே பதினெட்டாம் நூற்றாண்டிலே முதல்முதலில்யே பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதுத்து போராடின ஒரு மன்னரிவர்… வீர கேரள வர்மா பழசி ராஜாங்கிறது அவரோட முழுப்பேரு. ‘வயநாட்டுச்சிங்கம்’ நு அவருக்கு பட்டப்பேருண்டு. இப்ப உள்ள கோட்டயம் பகுதியிலே மன்னரா இருந்தார். ஆரம்பத்திலே அவர் பிரிட்டிஷ்காரங்களுக்கு ஆதரவாத்தான் இருந்தார். திப்புசுல்தானை எதுத்து பிரிட்டிஷ் படைகள் போர்செய்தப்போ அவர் அதுக்கு ஆதரவு தெரிவிச்சார். ஆனா போர் முடிஞ்சதுமே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மத்த ராஜாக்கள் மேலே கடுமையான வரிகளைச் சுமத்த ஆரம்பிச்சாங்க. அதுக்கு எதிரா போராடின பழசி ராஜாவுக்கு மத்த ராஜாக்களோட உதவிகள் கிடைக்கல்லை. ஆனாலும் அவர் தன்னந்தனியா நின்னு போராடினார். கட்டாய வரிவசூலை அவர் எதிர்த்தார். அதனால அவரை பிரிட்டிஷ்காரங்க எதிரியா நினைக்க ஆரம்பிச்சாங்க. லெப்டினெண்ட் கோர்டான் தலைமையிலே அவரது அரண்மனையை தாக்கி அதை சூறையாடினாங்க. அதுக்கு முன்னாடியே அவர் ஊரைவிட்டு போயிருந்தார். தன் படையோட மலைப்பகுதியான வயநாட்டுக்குப்போய் இன்னைக்குள்ள மானந்தவாடி பக்கம் மலைகளுக்குள்ள முகாமிட்டு அங்க உள்ள ஆதிவாசிகளான கு