இந்த தண்ணீர் சாம்பாரை பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்
இந்த தண்ணீர் சாம்பாரை வேலைக்கு செல்லும் நேரத்திலும் மிகவும் சுலபமாக பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்
தக்காளி சாம்பார், காய் சாம்பார், வெங்காய சாம்பார், மிளகாய் சாம்பார் இவ்வாறு சாம்பாரில் பல வகைகள் இருக்கின்றன. ஆனால் பத்தே நிமிடத்தில் சுவையாக சட்டென செய்யக்கூடிய இந்த தண்ணீர் சாம்பாரை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்: துவரம்பருப்பு – ஒரு டம்ளர், புளி – எலுமிச்சை பழ அளவு, சின்ன வெங்காயம் – 10, பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, கத்தரிக்காய் – 2, பச்சை மிளகாய் – 6, பூண்டு – 5 பல், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி – ஒரு கொத்து.
செய்முறை: முதலில் எலுமிச்சைப்பழ அளவு புளியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, 10 நிமிடத்திற்க்கு பிறகு புளியை கரைத்து புளி கரைசலை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பெரிய வெங்காயம், 2 தக்காளி மற்றும் கத்தரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு 10 சின்ன வெங்காயங்கத்தை மட்டும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
அதன்பின் குக்கரில் ஒரு டம்ளர் பருப்பை சேர்த்து தண்ணீர் ஊற்றி இரண்டு முறை நன்றாக கழுவி கொள்ள வேண்டும். அதன் பின்னர் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றிபருப்புடன் அரை ஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பின் மீது வைக்க வேண்டும்.
அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் இவை மூன்றையும் பருப்புடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் 6 பச்சை மிளகாய், 5 பல் பூண்டு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் 10 சின்ன வெங்காயம் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அரைத்த விழுதையும் பருப்புடன் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பிறகு குக்கரில் பிரஷர் குறைந்ததும் மூடியைத் திறந்து பருப்பை கடைந்து விடவேண்டும். பின்னர் மீண்டும் குக்கரை அடுப்பின் மீது வைத்து கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து ஒரு கொதி வரும் வரை அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் வெந்தயம், நான்கு வரமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்க்க வேண்டும். பின்னர் இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து ஒருமுறை கலந்து விட்டால் போதும். சுவையான தண்ணீர் சாம்பார் சட்டென தயாராகிவிடும். இதனை சாதத்துடன் சேர்த்தும், இட்லி தோசையுடன் சேர்த்தும் சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக இருக்கு
Comments