கிடைத்தது வெற்றி /--ராதை சுப்பையா, ஈப்போ, மலேசியா
கிடைத்தது வெற்றி
சாலை ஓரத்து இரப்பர் மரங்களின் மிதமான
ஒட்டுப்பால் வாசனையில் விதைக்கப்பட்டது என்னுள்ளான
இந்த கனவு..
பதின்ம வயது
தொடங்கி வார்த்தைகள் மூளை நரம்பில்
பேசத் தொடங்கின..
என் ஒவ்வொரு
பாதச் சுவடுகள் நூறாயிரம்
கதைகளை எழுதி வைத்திருக்கின்றன
இருதலைக் கொள்ளியாய் எத்தனையோ தருணங்களில் தனித்தன்மை இழந்து
தடுமாறியது உண்டு
அவமானங்கள் நெஞ்சை
நிலைகுழைய வைத்தது
சுதந்திரம் பெண்ணுக்கு பொது என
பொய்யாய் பிரகடனப் படுத்தப்படுகின்றது
இங்கு நம்
தலை மட்டுமே
ஆடவேண்டும்
அறிவு மருந்துக்குக் கூட வேலை செய்வதை
பல தலைகள் விரும்புவதில்லை
காணாப் பிணமாய் நம் கருத்தும் உழைப்பும்
புதைக்கப்படுகின்றன
எல்லா நிலைகளையும் தகர்த்தெடுத்து
மகிழ்ச்சி மந்திரத்தை சொந்தமாக்கி இதோ இங்கு இன்று எனக்கு
* கிடைத்தது வெற்றி
எல்லையில்லா ஆனந்தத்தில் மனம் துள்ளிக்குதிக்க என் கனவுகள் மெய்பட காரணமானவர்களுக்கு கரம் கூப்பி குவிக்கின்றேன்
நன்றி மலர்களை🌹
--ராதை சுப்பையா, ஈப்போ, மலேசியா
Comments