துருவாச முனி
ரஜினிகாந்த் இவருக்கு வைத்த பெயர் துருவாச முனி அவ்வளவு கோவம் வரும் இவருக்கு "டேய் நான் மீன் திங்கிற பார்ப்பான் என்கிட்டயேவா" என்று கோபப்படுவார் அவர்
எல்லா மதத்தையும் இனத்தையும் ஒன்றாய் பார்த்து வளர்ந்தவர் அவர் ஆனால் இன்றும் பலர் அவரை குறிப்பிட்ட இனம் சார்ந்து பேசுவது தான் அபத்தமே....
ஒரே ஆள் அம்பேத்கர் பற்றியும்,அழகிய சிங்கர் பற்றியும் பேச முடியும் எனில் அது நிச்சயம் வாலி மட்டும் தான்
தான் சொல்ல நினைப்பதை கவிதையின் வழியே சொல்ல வேண்டும் என்பதில் மிகுந்த ஆசை கொண்டவர் அவர்
அவரிடம் எதுகை, மோனைகள் விளையாடும்
அதே சமயம் கவித்துமான பாடலுக்கும் அவரிடம் குறைவில்லை இன்றைய சமூகம் ரசிக்கும் பெரும்பாலான எம்.ஜி.ஆர் பாடல் எல்லாம் வாலி வாய் வந்த வார்த்தைகள் தான்
ஒரு முறை கண்ணதாசன் ஒரு பாடலை கேட்டு விட்டு "வர வர இந்த வாலி பய ஒழுங்கா எழுதவே மாட்டேங்குறான் டா"என்றாராம் உதவியாளரிடம் உடனே அவர் அருகில் வந்து ஐயா அது நம்ப பாட்டு தான் ஐயா என்று நினைவுப்படுத்தினாராம் அப்படி இருவரும் ஒருவரை ஒருவர் முந்தி கொண்டு பாடல்கள் எழுதினர்
என்னவாயினும் கண்ணதாசனை வாலியை போல் புகழ்ந்தவர் எவரும் இல்லை
"சீட்டால் தொலைத்த சில்லறைய நீ
பாட்டலே சம்பாதி
நீ பாரதியின் செம்பாதி"
தனக்கு எதிரான கடை விரிக்கும் எல்லாருக்கும் முதல் வாழ்த்து மடல் செல்வது வாலியிடம் இருந்து தான்
ஏன் அவர் இறக்கும் வரை அத்துணை இளம் கவிஞர்களுக்கும் நா.முத்துக்குமார்,பழ நிபாரதி,நெல்லை ஜெயந்தா,பா.விஜய்,சினேகன்,தாமரை என்று எல்லோரும் கூடும் இடம் இவர் இல்லம் தான்
நான் பாட்டு எழுத போகிறேன் என்று கமல் ஆசி பெற்றதும் இவரிடம் தான் அப்பொழுது அவர் சொன்ன வாசகம் "வாங்கயா வாங்கயா நீங்கலான் எழுதணும் அப்ப தான் எங்களுக்கு சுமை குறையும்"என்றாராம்
அப்படி பட்ட மிக பெரிய மனிதர் ஐயா வாலி
ஒரு முறை ஒரு பத்திரிக்கைகாரர் வாலியிடம் கேட்டார்
உங்களை விட வைரமுத்து சிறப்பாய் எழுதுவதாய் சொல்கிறார்களே நீங்கள் ஏன் அவரை போல் எழுத கூடாது என்று அதற்கு அவர் சொன்னார்
நான் வாலியாக இருக்கவே விரும்புகிறேன் போலியாக அல்ல என்று
இன்றும் இதே எண்ணம் பலருக்கும் இருக்கும்,
இருக்கட்டும்
வைரமுத்து திரைப்பாடலின் கமலஹாசன் எனில் வாலி திரையுலகின் superstar....
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்......
இணையத்தில் இருந்து எடுத்தது
Comments